7 people died :பீகாரில் போலி மது அருந்தி 7 பேர் உயிரிழப்பு: 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

பீகாரில் போலி மது அருந்தி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பாட்னா: 7 people died after consuming fake liquor in Bihar : பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெரும் சோகச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மது பானம் அருந்திய 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் போலி மது அருந்திய 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 10 க்கும் அதிகமானோருக்கு கண் பார்வை இழந்துள்ளனர்.

இது குறித்து சரண் மாவட்ட (Saran District) மாஜிஸ்திரேட் ராஜேஷ் மீனா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: “போலி மது அருந்தி கடுமையாக பாதிக்க்கப்பட்டவர்கள் சாப்ரா மற்றும் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும், சதர் மருத்துவமனையிலும் வியாழக்கிழமை 22 பேருக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் போலி மது அருந்திய ஐந்து பேர் சதர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். அதே நேரத்தில் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். போலி மது அருந்தி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினர் யாரிடமும் புகார் அளிக்கவில்லையாம்.

மது அருந்தி பாதிக்கப்பட்ட‌ 10க்கும் மேற்பட்டோர் பார்வையை இழந்துள்ளனர் (More than 10 people have lost their sight) என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் தனுகா டோலி கிராமத்தில் இருந்து போலி மதுபானம் வாங்கி வந்துள்ளனர். இது தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து வருகிறோம். கைது நடவடிக்கை முடிந்த பிறகு அவர்களின் எண்ணிக்கையை கூற முடியும் என்று சரண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் தெரிவித்தார்.

இது குறித்து அம்மாநில அமைச்சர் அசோக் சௌத்ரி பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியது: போலி மது உற்பத்தி செய்து, விற்பனை செய்தவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை (Punishment as per law) கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான, போலி மது விற்பனையை தடை செய்வதில் தோல்வி அடைந்த‌ போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பீகாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரியில், சரண் மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஜூலையில், மாநிலத் தலைநகர் பாட்னாவில் (The state capital Patna) போலி மதுவால் இருவர் இறந்தனர்.

2015 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கு முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு ஏப்ரலில் முதல்வர் நிதிஷ் குமார் (Chief Minister Nitish Kumar) ஆட்சியில் மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் போலி மது விற்பனை அம்மாநிலத்தில் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த கடுமையான தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என‌ எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும் இதனை கட்டுப்படுத்துவதில் போலீசார் தோல்வி அடைந்துள்ளனர். போலி மது, கள்ளச்சாராயத்தை மாநிலத்தில் முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.