5 patrol vehicles to monitor Girivalam Road: திருவண்ணாமலை கிரிவலப்பாதையை 24 மணி நேரமும் கண்காணிக்க 5 ரோந்து வாகனங்கள்

திருவண்ணாமலை: 5 patrolling vehicles to monitor the Thiruvannamalai Girivalam Road round the clock: திருவண்ணாமலையில், திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையை 24 மணி நேரமும் கண்காணிக்க 5 ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் மிக அதிக பக்தர்கள் வருகைதரும் கோயில்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்தியாவில் முக்கிய மற்றும் பாரம்பரியமான ஆன்மீகத் சைவத்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. அண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது. கட்டக்கலையிலும், பெருவிழாக்களினாலும் திருவண்ணாமலை கோயில் மிகப் புகழ்பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் தீபத்திருவிழா தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

திருவண்ணாமலையில் மலைவலம் வருகின்ற பாதையில், எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இடைக்காடர், குகை நமச்சிவாயர், இரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம், மூக்குப் பொடி சித்தர் போன்றவை உள்ளன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இங்குள்ள கிரிவலப்பாதையில் ஏராளமான சாதுக்கள் தங்கி உள்ளனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு மாத பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர். திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது.

இதனிடையே கிரிவலப்பாதையில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம், பெங்களூருவில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியிருந்த பகுதி குறித்து கர்நாடக போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் அரசினர் கலைக் கல்லூரி முதல் அண்ணா வளைவு வரை உள்ள சுமார் 10 கி.மீ இடையே 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க 5 ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று (22.08.2022) தொடங்கிவைத்துள்ளார்.

இதில் 2 கி.மீட்டருக்கு ஒரு ரோந்து வாகனம் என 10 கி.மீ 5 ரோந்து வாகனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு ரோந்து வாகனத்திற்கும் ஒரு வாக்கி டாக்கி மற்றும் FRS செயலி கொண்ட மொபைல் போன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.