24 hour information center for Sabarimala devotees: சபரிமலை பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையம்

சென்னை: 24 hour information center for Sabarimala devotees. சென்னையில் சபரிமலை பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை முடிந்து சபரிமலை நடை அடைக்கப்படும்.

இதனைத்தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை நடை திறக்கப்பட்டு, 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை சாத்தப்படும். ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.

சபரிமலைக்கு செல்லவுள்ள பக்தர்கள் சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sabarimalaonline.org என்ற முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்ட தொடர்ந்து இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் வரும் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படும்.

இந்தநிலையில், தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை 16.11.2022 முதல் 27.12.2022 வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா 27.12.2022 முதல் 14.01.2023 வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் மையம் 16.11.2022 முதல் 20.01.2023 வரை செயல்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 044-28339999 ல் அழைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.