2 days of heavy rain : கர்நாடக கடலோரம், மலைப்பகுதிகளில் 2 நாட்கள் கனமழை: சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை

உடுப்பி, தென் கன்னடம், வட‌ கன்னடம், குடகு, சிக்கமகளூரு மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் கர்நாடகாவில் சிகப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: 2 days of heavy rains in Karnataka coast, hills : மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரம் மற்றும் மலைப்பகுதி உள்ள‌ மாவட்டங்களில் கனமழை பெய்யும், உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, குடகு, சிக்கமகளூரு மற்றும் ஷிமோகாவில் சிகப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி குடகில் மற்றும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி சிக்மகளூர் மற்றும் ஷிமோகா மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுக்கப்பட்டது.

தென் கன்னடம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடபா வட்டத்தில் நிலவரத்தை ஆய்வு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை (Holiday for Schools ) அளிக்க கடபா வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அதிக மழைப்பொழிவை வெளியிட்டது.

மைசூரு, ஷிமோகா, ஹாசன், தும்கூர், ஹாவேரி, பெல்காம், கத‌க், தார்வாட், விஜயப்பூர், கலபுர்கி, பீத‌ர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெல்காம், பாகல்கோட், மைசூரு, சாம்ராஜநகர், தும்கூர் ஆகிய மாவட்டங்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல் கர்நாடகம் முழுவதும் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை முதல் வெள்ளி வரை (ஆகஸ்ட் 3-5) சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) தெற்கு உள் கர்நாடகத்தில் (115.5 மிமீ-204 மிமீ), வியாழன் மற்றும் சனிக்கிழமை இடையே (ஆகஸ்ட் 4-6 வரை) வட உள்பகுதியில் கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகத்தில் (204 மிமீ) கனமழை மேலும் வார இறுதி நாட்களில் (ஆகஸ்ட் 6 மற்றும் 7) கடலோர கர்நாடகாவில் (coastal Karnataka) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் வியாழக்கிழமையும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய (Very heavy rain is likely)வாய்ப்புள்ளது.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், கோவை, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

மண்டல வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்ட செய்திகளின்படி, தமிழகத்தின் தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் (Kanchipuram, Tiruvallur.), செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.