2 days extra time to pay electricity bills: மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு: கட்டணம் செலுத்த 2 நாட்கள் அவகாசம்

சென்னை: 2 days extra time to pay electricity bills. ஆதார் இணைப்புக்குப்பிறகு நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இதனை ரத்து செய்யவும், பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க மின்சார வாரியத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் ஆதார் எண் இணைப்புக்குப் பின்னரே மின் கட்டணம் வசூலிக்க உள்ளதாகவும், இதன்மூலம் நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கு, நவம்பர் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இறுதி நாள் உள்ள தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது.

ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இவ்வாறு அவகாசம் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் ஆதார் இணைப்புக்குப் பிறகு, எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை, மின் கட்டண வசூல் மையங்கள் வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Electricity Board has announced that after Aadhaar linking consumers will be given 2 additional days to pay their bills.