2.8 kgs Gold Seized: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.22 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: 2.8 kgs Gold worth Rs.1.22 Crores seized by Chennai Air Customs. சென்னை விமான நிலையத்தில் ரூ.1.22 கோடி மதிப்பிலான 2.8 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி தெரிவிக்கையில், உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் வந்த ஆண் பயணி ஒருவர், மறைத்து வைத்திருந்த 195 கிராம் எடையிலான ரூ.24 ஆயிரம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆடைகளின் அடுக்குகளில் மறைத்து வைத்திருந்த ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 312 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.22.19 லட்சம் மதிப்பிலான 507 கிராம் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், இரு கழிவறைகளின் பக்கச் சுவர்களுக்கு இடையே, 2620 கிராம் எடையுள்ள தங்கப் பொட்டலங்கள் ரப்பர் பசையில் ஒட்டி மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 2.29 கிலோ தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியாகும்.

இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், கடந்த 14.10.22 அன்று, AIASL இல் பணிபுரியும் வாடிக்கையாளர் முகவர் ஒருவர் வருகை மண்டபத்திற்கு அருகில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.43.41 லட்சம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து இந்தியா வந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் தங்கம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.