Virat Kohli’s birthday : இன்று விராட் கோலியின் பிறந்த நாள்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சனிக்கிழமை 34 வயதில் காலடி எடுத்து வைக்கிறார் (Virat Kohli turns 34 on Saturday). வலது கை பேட்ஸ்மேனான விராட்கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன‌. தற்போது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியுடன் கோலி ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் கோலி (Kohli has been playing well in T20 World Cup matches), நான்கு ஆட்டங்களில் மூன்று அரை சதங்களை அடித்ததால் அவர் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி உள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோலி சிறப்பாக ஆடாடததால், அவரை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் ஆசிய கோப்பைக்கு பிறகும் தற்போதும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

புது டெல்லியில் பிறந்த இவர் முதல் தரத் கிரிக்கெட் போட்டிகளில் 2006 ஆம் ஆண்டில் விளையாடுவதற்கு முன்பாக தில்லி அணிக்காக விளையாடினார். மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது வயதிற்கு கீழானவர்களுக்கான உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்றி பெற்றார். அதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் தனது பத்தொன்பதாவது வயதில் முதல் போட்டியான இலங்கைத் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச‌ கிரிக்கெட்ப் போட்டியில் விளையாடினார்.

2011 உலகக்கோப்பைக்கான இந்தியத் கிரிக்கெட் அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்தியத் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2013 ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்தார்.2016 ஆம் ஆண்டிற்கான உலக இருபது20 போட்டியின் தொடர்நாயகன் விருது பெற்றார்.

2014 ஆம் ஆண்டில் இந்தியத் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Board of Control for Cricket in India) தரவரிசையின் படி சர்வதேச டி20 மட்டையாளர்களின் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார். 2017 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 2017 (நவம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை) சர்வதேச‌ ஒருநாள் போட்டி தரப்படுத்தலில் முதல் இடத்தில் இருந்தார். ஐபிஎல் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.

விராட் கோலி பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 2017 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறை சார்பில் பத்மஶ்ரீ விருது (PadmaShri Award) வழங்கி கவுரவிக்கப்பட்டது.