Indian Cricket Team: விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரின் விக்கெட்டை பறித்தால் டி20யில் இந்தியா 60 ரன்களுக்கு ஆட்டமிழக்கும்

பெங்களூரு: ((Indian Cricket Team) டி20 கிரிக்கெட்டில் உலகின் வலிமையான அணிகளில் இந்திய கிரிக்கெட் அணியும் ஒன்று. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை என்றாலும், டீம் இந்தியா பலமானது என்பதில் சந்தேகமில்லை.

பெங்களூரு: (Indian Cricket Team) டி20 கிரிக்கெட்டில் உலகின் வலிமையான அணிகளில் இந்திய கிரிக்கெட் அணியும் ஒன்று. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை என்றாலும், டீம் இந்தியா பலமானது என்பதில் சந்தேகமில்லை.

(இந்திய கிரிக்கெட் அணி) ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டி20 தொடர்களை வென்றுள்ள இந்தியா, 2007ல் நடைபெற்ற முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் ஆன‌ அணி ஆகும். கேப்டன் ரோஹித் சர்மாவும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் தற்போதைய இந்திய அணியின் முக்கிய தூண்கள். இவரைத் தவிர இந்திய அணியில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இந்திய அணிக்கு இவ்வளவு வலுவான பேட்டிங் வரிசை இருந்தபோதிலும், விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா (Rohith Sharma) ஆகியோர் அவுட்டானால் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 60 ரன்களில் ஆட்டமிழக்கும். ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆப்கான், இப்படி ஒரு அபத்தமான கருத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் (Asghar Afghan). இந்திய அணி குறித்து அஸ்பர் ஆப்கான் இது போன்று கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பலம் குறித்து கேள்வி எழுப்பினார். “நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம், எங்கள் திட்டங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவைச் சுற்றியே இருக்கும். இருவரும் அவுட்டானால் அது இந்திய அணியின் முடிவாகும் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே தொடக்கத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை குறி வைத்து தாக்குவோம். குறிப்பாக (Virat Kohli) விராட் கோலி, அவர் ஒரு அற்புதமான வீரர். ஒருமுறை ரிதத்தை கண்டுபிடித்து விட்டால், அவரை மீண்டும் வெளியேற்றுவது கடினம். கோலியும், ரோஹித் சர்மாவும் முன்கூட்டியே வெளியேறினால், இந்தியா 100-120 ரன்களை இழக்கும். அப்போது இந்திய அணி 60-70 ரன்களுக்கு ஆட்டமிழக்கும் என்று தெரிவித்துள்ளார்.