Smriti Mandhana Record : ஸ்மிருதி மந்தனா@3,000: மிதாலி ராஜின் சாதனை முறியடிப்பு

76 வது ஒருநாள் இன்னிங்சில் 3,000 ரன்களை கடந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை ( Mithali Raj Record) ஸ்மிருதி மந்தனா முறியடித்தார்.

கேன்டர்பரி: Smriti Mandhana Record: கிரிக்கெட் உலகின் வசீகர நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3,000 ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் மந்தனா இந்த சாதனையை படைத்தார். ஸ்மிருதி மந்தனா தனது 76 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்து 3,000 ரன்களை கடந்தார். மூத்த கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் 88 வது ஒருநாள் இன்னிங்சில் 3,000 ரன்களை கடந்தார்.

இந்தியாவுக்காக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ள ஸ்மிருதி மந்தனா, ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 3 வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் (Belinda Clark of Australia), ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3,000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.கிளார்க் இந்த சாதனையை வெறும் 62 இன்னிங்ஸ்களில் செய்துள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய கேப்டன் மெக் லானிங், 64 இன்னிங்ஸ்களில் 3,000 ஒருநாள் ரன்களை கடந்த இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: அதிவேகமாக 3,000 ரன்களைக் கடந்தவர்கள் (Fastest to cross 3,000 runs)

பெலிண்டா கிளார்க் (ஆஸ்திரேலியா): 62 இன்னிங்ஸ்
மெக் லானிங் (ஆஸ்திரேலியா): 64 இன்னிங்ஸ்
ஸ்மிருதி மந்தனா (இந்தியா): 76 இன்னிங்ஸ்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனைகள் (Indian players who have scored most runs) (டாப்-5)

7,805: மிதாலி ராஜ் (211 இன்னிங்ஸ், 7 சதங்கள், 50.68 சராசரி)
3,318: ஹர்மன்’ப்ரீத் கவுர் (104 இன்னிங்ஸ், 5 சதங்கள், 38.58 சராசரி)
3023: ஸ்மதி மந்தனா (76 இன்னிங்ஸ், 5 சதங்கள், 43.18 சராசரி)
2,856: அஞ்சும் சோப்ரா (112 இன்னிங்ஸ், 01 சதம், 31.38 சராசரி)
2,299: பூனம் ராவத் (73 இன்னிங்ஸ், 3 சதம், 34.83 சராசரி)