Road Safety World Series 2022: சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) தலைமையில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி

செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 2 வரை நடக்கும் சாலை பாதுகாப்பு உலக தொடரில் (Road Safety World Series) விளையாடும் இந்தியா லெஜண்ட்ஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.பத்ரிநாத் இடம்பெற்றுள்ளார்.

பெங்களூரு: செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 2 வரை நடக்கும் சாலை பாதுகாப்பு உலக தொடரில் (Road Safety World Series)விளையாடும் இந்தியா லெஜண்ட்ஸ் (சச்சின் டெண்டுல்கர்) அணியில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.பத்ரிநாத் இடம்பெற்றுள்ளார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் சாலை பாதுகாப்பு உலக தொடர் (Sachin Tendulkar)) அணியில், கர்நாடக அணியின் முன்னாள் கேப்டன் ஆர். வினய் குமார், பீன்யா எக்ஸ்பிரஸ் புகழ் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் இந்தப் போட்டியில் விளையாடுவார்கள்.

நியூசிலாந்து லெஜண்ட்ஸ், இங்கிலாந்து லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் மற்றும் வங்க தேச லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் இந்தியா லெஜண்ட்ஸுடன் (India Legends) போட்டியில் பங்கேற்கின்றன.

போட்டிகள் கான்பூர், ராய்ப்பூர், இந்தூர் மற்றும் டேராடூனில் (Kanpur, Raipur, Indore and Dehradun) நடைபெறும்.

இந்திய லெஜண்ட்ஸ் (India Legends) அணி:
சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), யுவராஜ் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், முனாப் படேல், எஸ். பத்ரிநாத், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பின்னி, ஆர். வினய் குமார், அபிமன்யு மிதுன், மன்பிரீத் கோனி, பிரக்யான் ஓஜா, ராஜேஷ் பவார், ராகுல் சர்மா.

நியூசிலாந்து லெஜண்ட்ஸ் (New Zealand Legends) அணி:
ராஸ் டெய்லர் (கேப்டன்), ஜேக்கப் ஓரம், ஜேமி ஹோவ், ஜேசன் ஸ்பைஸ், கைல் மில்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், ஷேன் பாண்ட், டீன் பிரவுன்லீ, புரூஸ் மார்ட்டின், நீல் புரூம், ஆரோன் ரெட்மாண்ட், ஆன்டன் டெவ்சிச், கிரேக் மெக்மில்லன், கரேத் ஹாப்கின்ஸ், ஹாமிஷ் பென்னட்.

ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் (Australia Legends) அணி:
ஷேன் வாட்சன் (கேப்டன்), அலெக்ஸ் டூலன், பென் டங்க், பிராட் ஹாட்ஜ், பிராட் ஹாடின், ஸ்டூவர்ட் கிளார்க், பிரட் லீ, பிரைஸ் மெக்குயின், கால்ம் பெர்குசன், கேமரூன் வைட், ஜார்ஜ் ஹார்லின், ஜேசன் கிரேஜா, ஜான் ஹேஸ்டிங்ஸ், டிர்க் நான்ஸ், நாதன் ரியர்டன், சாட் சேயர்ஸ் .

வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் (West Indies Legends) அணி:
பிரையன் லாரா (கேப்டன்), டன்ஜா ஹயாட், தேவேந்திர பிஷூ, டுவைன் ஸ்மித், ஜெரோம் டெய்லர், கிர்க் எட்வர்ட்ஸ், மார்லன் இயன் பிளாக், நரசிங் தியோனரைன், சுலைமான் பென், டேரன் பவல், வில்லியம் பெர்கின்ஸ், டேரியன் பார்த்லி, டேவ் முகமது, கிரிஷ்மர் சாண்டோகி.

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் (England Legends) அணி:
இயன் பெல் (கேப்டன்), நிக் காம்ப்டன், பில் மஸ்டார்ட், கிறிஸ் ட்ரெம்லெட், டேரன் மேடி, டேரன் ஸ்டீவன்ஸ், ஜேம்ஸ் டிண்டால், ரிக்கி கிளார்க், ஸ்டீபன் பாரி, டிம் ஆம்ப்ரோஸ், டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ், கிறிஸ் ஸ்கோஃபீல்ட், ஜேட் டெர்ன்பாஷ், மால் லோய்.

வங்க தேசம் லெஜண்ட்ஸ் (Bangladesh Legends) அணி:
ஷஹாதத் ஹொசைன் (கேப்டன்), அப்துர் ரசாக், ஆலம்கிர் கபீர், அஃப்தாப் அகமது, அலோக் கபாலி, மாமூன் உர் ரஷீத், நஜ்மாஸ் சதாத், திமன் கோஷ், டாலர் மஹ்மூத், காலித் மசூத், முகமது ஷெரீப், மெஹ்ரப் ஹொசைன், எலியாஸ் ஹஸ்ஸன், டி ஹஸ்ஸான், மொஹம்மத் சன்னி, மொஹம்மத் சன்னி, மொஹம்மது சன்னி, இம்ரான்.

இலங்கை லெஜண்ட்ஸ் (Sri Lanka Legends)அணி:
திலகரத்ன டில்ஷான் (கேப்டன்), கௌசல்ய வீரரத்ன, மஹேல உடவத்த, ருமேஷ் சில்வா, அசேல குணரத்ன, சாமர சில்வா, இசுரு உதான, சாமர கபுகெதர, சமிந்த வாஸ், சதுரங்க டி சில்வா, சி. ஜயசிங்க, தமிக பிரசாத், தில்ருவன் பெரேரா, டில்ஷான் முனவீர, இஷான் ஜயரத்ன, ஜீவன் மெண்டிஸ், நுவான் குலசேகர, சனத் ஜயசூரிய, உபுல் தரங்க, திசர பெரேரா.

தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் (South Africa Legends) அணி:
ஜான்டி ரோட்ஸ் (கேப்டன்), அல்விரோ பீட்டர்சன், ஆண்ட்ரூ புட்டிக், எடி லீ, கார்னெட் க்ரூகர், ஹென்றி டேவிட்ஸ், ஜேக்ஸ் ருடால்ப், ஜோஹன் போத்தா, ஜோஹன் வான் டெர் வாத், லான்ஸ் க்ளூஸ்னர், நோரிஸ் ஜோன்ஸ், மக்காயா என்’டினி, மோர்னே வான் வைக், டி., வெர்னான் பிலாண்டர், க்சாண்டர் டி பியூன்.