RIP Symonds: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு

RIP Symonds
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நினைவஞ்சலி

RIP Symonds: ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டவுன்ஸ்வில்லி அருகே கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவருக்கு நினைவாஞ்சலி.

சைமண்ட்ஸ் “அவரது சர்வதேச விளையாட்டு வாழ்க்கையின் உச்சக் காலத்தில் ஒரு வழிபாட்டு நாயகனாகவும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் கண்ட மிகவும் திறமையான ஆல்ரவுண்டர்களில் ஒருவராகவும் இருந்தார்.

சைமண்ட்ஸின் மரணச் செய்தியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது இணையதளத்தில் வெளியிட்டது, சனிக்கிழமை (2022, மே 14) இரவு நடைபெற விபத்து பற்றிய விவரங்களுடன் போலீஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த துயரமான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தை சேர்ந்த சைமண்ட்ஸ் எண்ணற்ற ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தவர். சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்களை அடித்தார், ஆனால் அவர் ஒரு வரையறுக்கப்பட்ட ஓவர்கள் நிபுணராக அறியப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்காக 198 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய சைமண்ட்ஸ், இரண்டு உலகக் கோப்பைகளை வென்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சைமண்ட்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளராக அவதாரம் எடுத்தார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், ஆண்ட்ரூவின் மரணத்தை தாங்க முடியாத இழப்பு என்று சொல்லி வருத்தம் தெரிவித்தார். சைமண்ட்ஸ் பந்தை நீண்ட தூரம் அடிக்கும் சைமண்ட்ஸ், தனது வாழ்க்கையை விரைவில் முடித்துக் கொண்டார் என்றும் பார்டர் கூறினார்.

Andrew Symonds Dies In A Car Accident Aged 46

இதையும் படிங்க: Buffalo supermarket: அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு