Common wealth Games : காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் பேட்மின்டனில் புதிய வரலாறு படைத்த ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி

பர்மிங்ஹாம் : Rankireddy and Chirag Shetty have created a new history in Badminton : இங்கிலாந்தில் நடைபெறும் காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி பேட்மின்டனில் புதிய வரலாறு படைத்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் காமன் வெல்த் விளையாட்டுப் (Common wealth Games) போட்டி நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று இந்தியாவைச் சேர்ந்த ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி , இங்கிலாந்தைச் சேர்ந்த பென் லென், சீன்வென்டி ஜோடியை தோற்கடித்து காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் முதன் முறையாக தங்கப்பதக்கம் வென்று பேட்மின்டன் இரட்டையை போட்டியில் புதிய வரலாறு படைத்துள்ளனர். முதல் செட்டை 21-15 என வென்ற இந்திய ஜோடி, 2 வது செட்டை 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றனர்.

அதே போல் பேட்மின்டன் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து (PV Sindhu) மற்றும் ஆண்கள் பிரிவில் லக்‌ஷ்யா சென் (Lakshya Sen) ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சத்தியன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்.

காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மின்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த‌ பி.வி.சிந்து கனடாவைச் சேர்ந்த‌ மிச்செல் லியை எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், முதல் செட்டின் 10 புள்ளிகளுக்கு பிறகு லி மீது சிந்து ஆதிக்கம் செலுத்தி ஆடி அதிக‌ புள்ளிகளை குவித்தார். முதல் செட்டை 21-15 என வெற்றி பெற்ற‌ பி.வி.சிந்து, 2வது செட்டையும் வென்று, 2-0 என்ற நேர் செட் கணக்கில் கனடா வீராங்கனையை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து கனடா வீராங்கனையை 2-0 என வீழ்த்தி தங்கம் வென்றார். தனது முதல் தங்க பதக்கத்தை (First gold medal) இந்த காமன்வெல்த் போட்டியில் சிந்து வென்றார்.

அவரைத்தொடர்ந்து ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்‌ஷ்யா சென் தங்கம் வென்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் ஃபைனலில் இந்தியாவின் லக்‌ஷ்யா சென், மலேசிய வீரர் யாங்கை எதிர்கொண்டார்.

முதல் கேம் பயங்கர விறுவிறுப்பாக இருந்தது. முதல் செட்டை மலேசிய வீரர் 21-19 என வென்றார். இதையடுத்து அடுத்த 2 செட்களிலும் ஆக்ரோஷமாக விளையாடிய இந்தியாவின் லக்‌ஷ்யா சென், மலேசிய வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். மிச்செல் லி கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார். பி.வி.சிந்து கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இந்தியாவின் வீரர்கள் மொத்தமாக 57 பதக்கங்களை (57 medals) வென்று பதக்க பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது.

கடைசி நாளான இன்று இந்தியாவிற்கு மேலும் சில பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது அதுவும் தங்கமாக கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் இன்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஆடும் பெரும்பாலான போட்டிகள் இறுதிப்போட்டிகள் என்பதால் தங்கத்திற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.