Prime Minister Narendra Modi : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

தில்லி: Commonwealth Games PM Greets medal winners : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கி காமன்வெல்த் போட்டி (Commonwealth Games) நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பளுதூக்கும் போட்டியில் 2 பதக்கங்களை வென்றுள்ளது. மகளிர் பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளார்.

மகளிருக்கான 49 கிலோ ஸ்னாட்ச் சுற்றில் 84 கிலோ மற்றும் க்ளீன் மற்றும் ஜெர்க்கில் 88 கிலோ என மொத்தமாக 172 கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் (Meerabai Sanu won the gold medal). ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். அதுமட்டுமின்றி நேற்று மட்டும் இந்தியா 3 பதக்கங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பளுதூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார் (Sanket Sarkar), ஸ்னாட்ச்சில் 113 கிலோ மற்றும் க்ளீன் மற்றும் ஜெர்க்கில் 135 கிலோ என மொத்தம் 248 கிலோ எடையை தூக்கிய சங்கேத் சர்கார், மலேசியாவின் பிப் அனிக்கை விட ஒரு கிலோ குறைவாக தூக்கியதால் தங்கத்தை தவறவிட்டு வெள்ளி பதக்கம் வென்றார்.

பிறகு அதைத்தொடர்ந்து பளுதூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டி நடந்தது. 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட குருராஜா பூஜார் (Gururaja Poojar), ஸ்னாட்ச்சில் 118 கிலோ மற்றும் க்ளீன் மற்றும் ஜெர்க்கில் 151 கிலோ எடையை தூக்கினார். மொத்தமாக 269 கிலோ எடையை தூக்கிய குருராஜா வெண்கலம் வென்றார்.

உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் தரப்பிலிருந்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரையில் (Twitter) பதிவிட்டுள்ளதாவது: சங்கேத் சர்காரின் அபரமான முயற்சி, அவர் மதிப்பு மிக்க வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது காமன் வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துகள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்.

குருராஜாவின் சாதனையால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றதற்கு அவருக்கும் வாழ்த்துகள் (Congratulations to him for winning bronze). அவர் மிகுந்த ஊக்கத்தையும், மன உறுதியையும் வெளிப்படுத்தினார். அவரது விளையாட்டுப் பயணத்தில் மேலும் பல மைல்கல் சாதனைகள் சிறக்க வாழ்த்துகிறேன்.

அதே போல பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்றுள்ளது இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்துகிறது (Making India proud again). அவர் பர்மிங்காம் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று புதிய காமன்வெல்த் சாதனையை படைத்ததில் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவரது வெற்றி பல இந்தியர்களை, குறிப்பாக வளரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். விளையாட்டுத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது மீராபாய் சானுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Also Read : Money recovery in online fraud: ஆன்லைனில் ரூ.1.51 லட்சம் ’அபேஸ்’; உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை

Also Read : Cutting sickle shaped cake Viral: கெத்தாக வெட்டிய கேக்.. கொத்தாக அள்ளியது போலீஸ்: திருவாரூரில் பரபரப்பு

PM Greets medal winners prime minister greets medal winners of commonwealth games