அடிலெய்டு: (Pakistan vs Bangladesh) அதிர்ஷ்டவசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, சூப்பர்-12 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பை போட்டியின் பாகிஸ்தான் (Pakistan) அரையிறுதிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்தது (T20 World Cup 2022).
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு (Pakistan vs Bangladesh) இடையிலான போட்டி மிக முக்கியமானதாக கருத்தப்பட்டது. முன்னதாக நடந்த போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இரு அணிகளும் தலா 4 புள்ளிகளைப் பெற்றிருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி குரூப்-2ல் இருந்து 2 வது அணியாக அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், வங்காளதேசத்தை வீழ்த்தி குரூப்-2 முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் அரை இறுதி போட்டிக்குள் 4 அணிகளில் ஒன்றாக நுழைந்தது.
முக்கியமான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை பங்களாதேஷ் அணி, வங்கதேச அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷண்டோ 54 ரன்களும், சௌமியா சர்கார் 20 ரன்களும், ஹொசைன் 24 ரன்களும் எடுத்தனர்.பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு எதிராக போராடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.பாகிஸ்தான் அணிக்காக அபாரமான விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி (Shaheen Shah Afridi)22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
எளிதான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 128 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் பி-யில் இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது (Pakistan team has been entered for semi-final). வங்கதேசத்தின் மோசமான ஃபீல்டிங்கினால் இந்த போட்டியில் தோல்வியை தழுவியது.



