National Sports Day celebration in Chennai: சென்னையில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டுதினக் கொண்டாட்டம்

சென்னை: National Sports Day celebration in Chennai by Sports Commission of India. சென்னையில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டுதினக் கொண்டாடப்பட்டது.

இந்திய ஹாக்கி விளையாட்டு ஆளுமையான மேஜர் தியான்சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சர்வதேச ஹாக்கி விளையாட்டு வீரர்கள் கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு மேஜர் தியான் சந்த் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து ஹாக்கி வீரர் மாரீஸ்வரன், மேஜர் தியான் சந்த் பற்றியும், அவரது சாதனைகள் குறித்தும் பேசினார். இளம் விளையாட்டு வீரர்கள் அதிகமான முயற்சி எடுத்து, தங்களது விளையாட்டில் ஜொலிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய விளையாட்டுகள் தினத்தையொட்டி, விளையாட்டு ஆளுமைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி விளையாட்டு ஆளுமையான மேஜர் தியான்சந்த் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் புகழாரமும் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் ட்விட்டர் செய்தியில், “தேசிய விளையாட்டுகள் தின வாழ்த்துக்கள் மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம். சமீப ஆண்டுகள் விளையாட்டுகளுக்கு மகத்தானவையாக உள்ளன. இந்த நிலைமை தொடரட்டும். இந்தியா முழுவதும் விளையாட்டுக்கள் செல்வாக்கு பெறட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.