Crime News: ஊத்தங்கரையில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது: கிரைம் செய்திகள்..

கிருஷ்ணகிரி: Police arrested a man for illegally selling lottery tickets in Uthangarai. ஊத்தங்கரையில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ஊத்தங்கரை உப்பு மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள்,ரூ.2,190 பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல், சிப்காட் காவல் நிலைய பகுதியில் ரஜினி என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை 19.08.2022 ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு மறுநாள் 20.08.2022 ஆம் தேதி காலை 06.00 மணிக்கு எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை என அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கேட்டும்,தேடியும் கிடைக்கவில்லை என ரஜினி சிப்காட் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை செய்த சிப்காட் போலீசார் இருசக்கர வாகனம் திருடிய நபரை 28.08.2022 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி போலீசாருக்கு சாராயம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி நாய்குத்தி பகுதியில் உள்ள பூபாலன் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது உறுதியானது. பின்னர் அங்கு இருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பழனியம்மாளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.