Naseem Shah age Fraud: 2018ல் 17 வயது, 2022ல் 19 வயது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரின் வயது மோசடியை அம்பலப்படுத்திய பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான 19 வயதான நசீம் ஷா (Naseem Shah), தனது 2 வது பந்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுலை கிளீன் போல்டு செய்தார்.

துபாய்: (Naseem Shah age Fraud) பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், தனது அபார பந்துவீச்சால் கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்களால் பாராட்டப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சர்வதேச டி20 போட்டியில் (International T20 tournament) அறிமுகமான 19 வயதான நசீம் ஷா, தனது 2வது பந்தில் டீம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலை ஒரு விக்கெட்டாக கிளீன் பவுல்ட் செய்தார். அறிமுக போட்டியிலேயே 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளரின் திறமையை அனைவரும் பாராட்டினர்.

2018 இல் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நசீம் ஷா, பாகிஸ்தானின் வருங்கால நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறார். கிரிக்கெட் பதிவுகளின்படி, இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியின் போது நசீம் ஷாவுக்கு வயது 19. ஆனால் இது பொய் என்பது பாகிஸ்தான் பத்திரிகையாளர் சாஜ் சாதிக் (Pakistan journalist Saj Sadiq) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்த சுட்டுரையின் மூலம் தெரியவந்துள்ளது.

2018 இல், பாகிஸ்தான் பத்திரிகையாளர் சாஜ் சாதிக் சுட்டுரையில் ஒரு பதிவில், “பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர் அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட திறமையான 17 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்” என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் சாஜ் சாதிக் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். முன்னதாக நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் நசீம் ஷா ஜொலித்த போது அந்த பழைய சுட்டிரை பதிவு வைரலானது.

2018 இல் நசீம் ஷாவுக்கு 17 வயது என்றால், 2022ல் அவருக்கு 21 வயது இருக்க வேண்டும். ஆனால் கிரிக்கெட் பதிவுகளின்படி நசீம் ஷாவுக்கு 19 வயதுதான் ஆகிறது. அப்படியானால் நசீம் ஷா தனது உண்மையான வயதை மறைத்து விட்டாரா? ஆம் என்கிறது கிரிக்கெட் வட்டாரங்கள். கடந்த ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் (Mohammad Asif) அளித்த அறிக்கை இதை மேலும் மெருகேற்றுகிறது.

உண்மையான வயதை மறைத்து வயதை ஏமாற்றுவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு புதிதல்ல. முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதி (Shahid Afridi) மீதும் இதே போன்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவின் முறை என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.