MS Dhoni: “தோனியின் உடலமைப்பு என்னிடம் இல்லை ஆனால்..”- குஜராத் அணி வீரர் பேச்சு..!!

குஜராத் அணி வீரர் பேச்சு
குஜராத் அணி வீரர் பேச்சு

MS Dhoni: ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அறிமுக அணியான குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

குஜராத் அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வருபவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா. டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் டெஸ்ட் போட்டியின் விக்கெட் கீப்பராக சாஹா செயல்பட்டு வந்தார்.

அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு வருவதால் சாஹா-வுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய 20 ஓவர் போட்டி ஆட்டமுறை குறித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ” நான் குறுகிய வடிவிலான போட்டிகளுக்கான வீரர் அல்ல என்று சிலர் ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே எப்போதும் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்பினேன்.

மகேந்திர சிங் தோனி, ஆண்ட்ரே ரசல் அல்லது கிறிஸ் கெய்ல் போன்றவர்களின் உடலமைப்பு என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னிடம் உள்ள ஆற்றல், எனது அணுகுமுறையுடன் பவர்பிளேயை என்னால் நன்றாக பயன்படுத்த முடியும். அதை தான் நான் செய்து வருகிறேன். ” என சாஹா தெரிவித்தார்.

இதையும் படிங்க: BJP: அமித்ஷாவை வரவேற்க இருந்த பா.ஜ.க. இளைஞரணி துணை தலைவரின் உடல் மீட்பு