Dhoni Inaugurates Super Kings Academy : ஓசூரில் உள்ள தோனி குளோபல் பள்ளியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியை மஹி திறந்து வைத்தார்

திங்களன்று பெங்களூரு வந்த எம்.எஸ்.தோனி, ஓசூரில் உள்ள தனது குளோபல் பள்ளியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியை (Dhoni Inaugurates Super Kings Academy) திறந்து வைத்தார்.

ஐபிஎல் தொடரில் நான்கு பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் சேலத்திலும் சென்னையிலும் அகாடமிகள் உள்ளன. ஓசூரில் உள்ள அகாடமி அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும். ஓசூரின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் (Dhoni Inaugurates Super Kings Academy) ஒரு புல்வெளி ஆடுகளம் உட்பட மொத்தம் 8 கிரிக்கெட் ஆடுகளங்கள் உள்ளன.

தனது எம்எஸ் தோனி குளோபல் பள்ளியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியை திறந்து வைத்து பேசிய மகேந்திர சிங் தோனி, “நான் எந்த பள்ளிகளுக்கு சென்றாலும், எனது பள்ளி நாட்களை நினைவில் கொள்கிறேன் ( I remember my school days). பள்ளி நாட்கள் நம் வாழ்வின் மிக முக்கியமான தருணங்கள் என்று நினைக்கிறேன். படிக்க, விளையாட‌ என்று எல்லாமே அங்கு உள்ளது. பள்ளியில் கழித்த நாட்கள் வாழ்க்கையில் திரும்ப வராது. இனிமையான நினைவுகள் உள்ளன. அங்கே நண்பர்களாக மாறுபவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நண்பர்களாக இருப்பார்கள்.

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (Chennai Super Kings team) வழி நடத்தி வரும் எம்எஸ் தோனி நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2010 இல் தோனியின் தலைமையில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சூப்பர் கிங்ஸ், அதன்பின் 2011, 2018 மற்றும் 2021ல் பட்டத்தை வென்றது. ஐபிஎல் 2023ல் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸை எம்எஸ் தோனி வழிநடத்துவார். அடுத்த ஐபிஎல் போட்டிக்கு பிறகு தோனி தொழில்முறை கிரிக்கெட்டிற்கு விடை பெற வாய்ப்புள்ளது.