India Enter The Final: மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை (India Enter The Final) கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று அரையிறுதி போட்டி நடைபெற்றது. முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.

108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடத் தொடங்கியது. தொடக்க வீராங்கனையாக ஷஃபாலி வர்மா, ஸ்வேதா செஹராவத் களமிறங்கினர். இதில் தொடக்கத்திலேயே ஷஃபாலி வர்மா 10 ரன்களிலேயே பரிதாபமாக ரன்அவுட் ஆனார். அவருக்கு அடுத்து களமிறங்கிய திவாரி ஸவேதா செஹராவத்துடன் இணைந்து ரன்களை குவிக்கத்தொடங்கினர். இதில் ஸ்வேதா செஹராவத் 39 பந்தில் அரை சதம் அடித்திருந்தார்.

மேலும் இந்திய அணி 95 ரன்கள் இருந்த போது சவுமியா திவாரி போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 14.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.