India won the 2nd T20 against New Zealand : 65 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

நியூசிலாந்து: India won the 2nd T20 against New Zealand by 65 runs : நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டி20 போட்டி இன்று (நவம்பர் 20) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 111 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி சிறப்பாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது நியூசிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே (Finn Allen and Devon Conway) களமிறங்கினர். அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஃபின் ஆலன் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். கான்வே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்று ஆட மற்ற வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். நிதானமாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்தார் (Kane Williamson scored a fifty). அவர் 52 பந்துகளில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில், 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்த நியூசிலாந்து 18.5 ஓவர்களுக்கு 126 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம், இந்திய அணி நியூசிலாந்தினை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.