India Tour of Zimbabwe : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய உத்தேச பூர்வ அணி

India's captain Virat Kohli, center, and teammates stand in a huddle before the start of the third and final one-day international cricket match between India and Australia in Bangalore, India, Sunday, Jan. 19, 2020. (AP Photo/Aijaz Rahi)

ஹராரே: (India Tour of Zimbabwe) இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்க உள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த‌ கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணியும், பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மனும் செயல்பட உள்ளனர். கே.எல்.ராகுல் 6 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார், அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுடன் இன்னிங்ஸைத் தொடங்குவார்.

கடந்த பிப்ரவரி மாதம் அகமதாபாத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவு (West Indies) களுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குப் பிறகு கே.எல்.ராகுல் எந்த ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாடவில்லை. ஐபிஎல் தொடருக்குப் பிறகு காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த ராகுலுக்கு ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இந்தியா அணிக்கு அவர் மீண்டும் திரும்பும் தொடராகும்.

கே.எல்.ராகுலின் வருகையால் மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மான் கில் (The opener Shubman Gill) 3 வது இடத்தில் விளையாடுவார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கில் 205 ரன்கள் எடுத்திருந்தார். ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா, விக்கெட் கீப்பர்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் ஆகியோர் மிடில் ஆர்டரில் இடம்பெறுவது உறுதி. இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் மற்றும் சைனாமென் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடும் லெவன் அணியில் இடம்பிடிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர்களின் ஒதுக்கீட்டில் கர்நாடக‌ வீரர் ப்ரிசித்தி கிருஷ்ணாவின் இடம் உறுதியாகியுள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான போட்டி ஸ்விங் பவுலர் தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு இடையே உள்ளது.

இந்தியாவின் உத்தேச பூர்வ அணி (India Playing XI)

கே.எல் ராகுல் (கேப்டன்)
ஷிகர் தவான்
சுப்மன் கில்
தீபக் ஹூடா
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
இஷான் கிஷன்
அக்சர் படேல்
தீபக் சாஹர்
குல்தீப் யாதவ்
ப்ரிசித்தி கிருஷ்ணா
ஷர்துல் தாக்கூர் அல்லது முகமது சிராஜ்
போட்டி ஆரம்பமாகும் நேரம்: பிற்பகல் 12.45 PM (IST)
இடம்: ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், ஹராரே