T20 World Cup 2022 : நாளை இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதும் டி20 கிரிக்கெட் போட்டி: துணைக் கேப்டன் ராகுலுக்கு சோதனை

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 4 ரன்களில் அவுட்டான ராகுல், நெதர்லாந்துக்கு எதிராகவும் பெரிய ஸ்கோரை எடுக்க முடியாமல் 9 ரன்களில் வெளியேறினார்.

பெர்த்:  India vs South Africa KL Rahul : ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி தனது 3 வது லீக் ஆட்டத்தை சூப்பர்-12 ஸ்டேஜில் ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன் குரூப்-2 இல் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதியில் இடம் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்திய அணி சிறந்த ஃபார்மில் இருப்பதைப் பற்றி கவலைப்பட ஒரே ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் தொடக்க ஆட்டக்காரரான துணை கேப்டன் கே.எல்.ராகுலின் தோல்வி.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 4 ரன்களில் அவுட்டான ராகுல், நெதர்லாந்துக்கு எதிராகவும் பெரிய ஸ்கோரை எடுக்க முடியாமல் 9 ரன்களில் வெளியேறினார். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் ராகுல் உள்ளார் (Rahul is under pressure to perform well against South Africa). முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், பார்மில் இல்லாத ராகுலுக்கு ஆதரவாக களமிறங்கியதுடன், ராகுல் அற்புதமான வீரர் என்று கூறியுள்ளார்.

புள்ளிவிவரங்கள் காட்டுவதை விட ராகுல் சிறந்த வீரர். ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரர். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுல் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்று வாசிம் ஜாபர் (Wasim Jaber) கூறினார். டி20 உலகக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த ராகுல், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராகுல் மீண்டும் தடுமாறினால், அவர் மீதான விமர்சனங்கள் இன்னும் அதிகமாகும்.

மறுபுறம், தென்னாப்பிரிக்க அணி (South African team)தனது முதல் போட்டியில் வங்காளதேசத்தை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நல்ல தொடக்கத்தைப் பெற்றது. ஆனால் ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் பகிரப்பட்டது. தெம்பா பவோமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் குரூப்-2 தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடும் லெவன் அணி (Playing XI)

  1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. கே.எல். ராகுல் (துணை கேப்டன்), 3. விராட் கோலி, 4. சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 7. ரவிச்சந்திரன் அஷ்வின், 8. அக்சர் படேல், 9. முகமது ஷமி, 10. புவனேஷ்வர் குமார், 11. அர்ஷதீப் சிங்.

போட்டி ஆரம்பம்: மாலை 4.30 (IST)
இடம்: வக்கா கிரிக்கெட் மைதானம், பெர்த்
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
நேரடி ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ஹாட் ஸ்டார்