India vs Australia 2nd T20: இந்தியாவுக்கு முக்கியப் போட்டி : மாற்றத்தை அணியில் செய்யாவிட்டால் வெற்றி பெறுவது கடினம்

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 வரை, இறுதி ஓவர்களில் புவனேஷ்வர் குமார் கடும் தோல்வியை சந்தித்துள்ளார். ஆசிய கோப்பையில் இந்திய அணி தொடர் தோல்வியால் இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை.

நாக்பூர்: India vs Australia 2nd T20: வருகை தரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2 வது போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, தொடரை வெல்லும் கனவை காப்பாற்ற வேண்டுமானால், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) இந்தியாவுக்காக இந்த முக்கியப் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இறுதி ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்து வருகிறார். இதனால், ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பினால், இந்தியாவின் இறுதி ஓவர் பிரச்சனை தீர்ந்துவிடும். ஆசிய கோப்பை போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி வரை டெத் ஓவர்களில் புவனேஷ்வர் குமார் கடும் தோல்வியை சந்தித்துள்ளார். ஆசிய கோப்பையில் இந்திய அணி தொடர் தோல்வியால் இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை.

ஆஸ்திரேலியாவின் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் (India vs Australia 2nd T2 Series) 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்த ஆஸ்திரேலியாவுக்கு கடைசி 4 ஓவர்களில் 55 ரன்கள் தேவைப்பட்டது. 17 வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் 15 ரன்களை விட்டுக் கொடுத்தார். 19-வது ஓவரில் மீண்டும் 16 ரன்கள் கொடுத்த புவனேஷ்வர், தனது அனுபவத்திற்கு ஏற்ப‌ பந்துவீசத் தவறினார். இறுதி ஓவரில் புவனேஸ்வர் 2 ஓவரில் 31 ரன்களை விட்டுக்கொடுத்தது இந்தியாவின் தோல்விக்கு வழி வகுத்தது. 19 வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் ஆஸி., விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை அடித்தார்.

கடந்த ஆசிய கோப்பை போட்டியின் சூப்பர்-4 ஸ்டேஜில் கூட புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) இறுதி ஓவரில் முற்றிலும் தோல்வியடைந்தார். பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 19 வது ஓவரில் 19 ரன்களை விட்டுக்கொடுத்த புவனேஷ்வர், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் 19 வது ஓவரில் 14 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த தோல்வியால் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு வரத் தவறியது. புவனேஷ்வர் குமார் டெத் ஓவர்களில் மொத்தம் நான்கு ஓவர்கள் வீசியதோடு, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான 19 வது ஓவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 17 வது மற்றும் 19 வது ஓவர் உட்பட கடைசி மூன்று டி20 போட்டிகளில் 63 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

டெத் ஓவர்களில் புவனேஷ்வர் குமார் தொடர்ந்து தடுமாறி வருவது இந்தியாவின் திட்டங்களையே புரட்டிப் போடுகிறது. எனவே ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு இன்றியமையாதவர். இதனால் நாக்பூரில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் பும்ரா விளையாடும் அணியில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. பும்ரா விளையாடினால், புவனேஷ்வர் குமார் அல்லது வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் (Umesh Yadav) விளையாடும் அணியில் இடம் பெறுவது சந்தேகம்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் லெவன் அணி

  1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. கே.எல். ராகுல் (துணை கேப்டன்), 3. விராட் கோலி, 4. சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 7. அக்சர் படேல், 8. ஹர்ஷல் படேல், 9. ஜஸ்பிரித் பும்ரா, 10. யுஸ்வேந்திர சாஹல், 11. புவனேஷ்வர் குமார்.

போட்டி ஆரம்பம்: மாலை 7 மணி
இடம்: விதர்பா கிரிக்கெட் நிறுவன மைதானம், ஜம்தா (நாக்பூர்)
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
நேரடி ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ஹாட் ஸ்டார்