Shami replaces Bumrah : டி20 உலகக் கோப்பை: பும்ராவுக்கு பதிலாக ஷமி தேர்வு செய்யப்பட்டதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரிசர்வ் வீரர்களாக முகமது சிராஜ் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருவரும் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர்.

பெங்களூரு: Mohammed Shami WC Squad: ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக மற்றொரு மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெறுகிறார்.

இந்திய அணியின் இறுதி 15 பேரில் பும்ராவுக்கு பதிலாக ஷமி இணைவார் (Shami will join in place of Bumrah) என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுள்ள முகமது ஷமி, பிரிஸ்பேனில் நடைபெறும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளார். இந்தியா, உலக சாம்பியனான ஆஸ்திரேலியா (அக்டோபர் 17), நியூசிலாந்து (அக்டோபர் 19) ஆகிய அணிகளுக்கு எதிராக பிரிஸ்பேனில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு (Australia and South Africa) எதிரான டி20 தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த வீரர் முகமது ஷமி, ஆஸி.க்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. பின்னர், தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த மறுவாழ்வு முகாமில் பங்கேற்ற ஷமி, பூரண குணமடைந்து உலகக் கோப்பை போட்டியில் விளையாட‌ தயாராகிவிட்டார்.

இதற்கிடையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் (Fast bowler Mohammed Siraj and all-rounder Shardul Thakur) ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருவரும் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர். அக்டோபர் 23-ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

டி20 உலகக் கோப்பை: புதுப்பிக்கப்பட்ட இந்திய அணி (Indian team)
ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷதீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் ஹூடா , ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின்.