Asia Cup Cricket Tournament : இலங்கையை இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்ட இந்தியா

துபாய்: Asia Cup Cricket Tournament, India forced to win against Sri Lanka today : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கையை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் (United Arab States) நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இதனையடுத்து இன்று இலங்கை அணியுடன் 2 வது ஆட்டத்தில் ஆட உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அணியும் ஏற்கெனவே ஆப்கானிஸ்தானை வெற்றுள்ளதால், அந்த அணியும், வெற்றி பெற கடுமையாக போராடும். எனவே இன்று நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்தது. எனவே இரு அணிகளும் போட்டியை வெல்ல கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் (Indian team played against Pakistan) பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. இதனால் வெற்றி அன்று வெற்றி பெறாமல் போனது. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் சிறிது மாறுதல்கள் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஹார்த்திக் பாண்டியா, யுஜவேந்திர சஹால் போன்றவர்கள் பாகிஸ்தான் அணிக்கு ரன்களை அதிக அளவில் கொடுத்தனர். எனவே பௌலிங்கில் அக்ஸர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடல்நலம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடத ஆவேஷ்கான் இன்று ஆட வாய்ப்புள்ளது (Avesh Khan is likely to play today). பேட்டிங்கில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோஹ்லி ஆகியோர் நல்லதொரு தொடக்கத்தை அமைத்து தந்தனர். விராட் கோஹ்லி தொடர்ந்து நல்ல முறையில் விளையாடி வருவது அணிக்கு பெரும் பலத்தை தந்துள்ளது. மிடில் ஆர்டரில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக்கு பதிலாக தீபக் ஹூடாவை களம் இறக்க அணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இலங்கை அணியில் சரித் அசலங்கா தவிர்த்து மற்ற வீரர்கள் வெற்றிக்கு தங்களின் பங்களிப்பை (Apart from Sarith Asalanga, other players in the Sri Lankan team contributed to the victory) ஒருவர் மாற்றி ஒருவர் வழங்கி வருகின்றனர். பந்து வீச்சில் தில்ஷன், அசிதா, மஹீஷ் உள்ளிட்ட அனைவரும் விக்கெட்டுகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியிடம் தோற்றதாலும், இலங்கை ஏற்கெனவெ ஒரு வெற்றியை பெற்றுள்ளதாலும் சூப்பர் 4 சுற்றில் பெற்றுள்ளதாலும், இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.