Asia Cup 2022 : ஆசிய கோப்பை 2022 அட்டவணை வெளியீடு : ஆக. 28 இல் இந்தியா-பாகிஸ்தான் போட்டி

ஆசிய கோப்பை 2022 ஆக. 27 முதல் செப். 11 ஆம் தேதி வரை துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. ஆசிய கோப்பை 2022 அட்டவணை (Asia Cup 2022 Schedule Release, India-Pakistan match on Aug. 28) வெளியிடப்பட்டது.

ஆக. 28 அன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி. ஆக. 28 அன்று துபாயில் A குரூப் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் (India and Pakistan face off) மோதுகின்றன. சூப்பர் 4 கட்டத்தில் அவர்கள் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) ஆசிய கோப்பை துபாயில் நடத்துவது கடந்த ஐந்து ஆண்டுகளில், இது இரண்டாவது முறையாகும். 2018 ஆம் ஆண்டில், ஒரு நாள் (ODI) வடிவத்தில் விளையாடிய போட்டி, செப். 15 முதல் 28 ஆம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடத்தப்பட்டது. இந்த போட்டித் தொடரை இலங்கை சார்பில் நடத்தப்பட்ட‌து. அந்நாட்டில் ஏற்பட்ட‌ ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக, ஆசிய கோப்பை 2022 ஐக்கிய அரபு அமீரகதுக்கு மாற்றப்பட்டது.

நீண்ட நாள் காத்திருப்பு மற்றும் ஆலோசனைக்குப் பிறகு, துணைக்கண்டத்தில் பருவமழை காரணமாக நிகழாண்டு ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தை புரவலராக அறிவிக்கப்பட்டது. ஆறு அணிகள் பங்கேற்கும் (Six teams will participate) போட்டி ஆகஸ்ட் 27-ம் தேதி துபாயில் தொடங்கும். இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் நடைபெறும். ஆனால் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன் இது ஒரு சிறந்த சோதனைக் களமாக இருக்கும் என்பதால் அனைத்து ஆசிய நாடுகளும் முழு பலம் கொண்ட அணியை தேர்வு செய்து அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட ஆசிய கோப்பை 2022 அட்டவணை :

ஆகஸ்ட் 27 – இலங்கை vs ஆப்கானிஸ்தான் -துபாய்

ஆகஸ்ட் 28 – இந்தியா vs பாகிஸ்தான் -துபாய்

ஆகஸ்ட் 30 பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் -ஷார்ஜா

ஆகஸ்ட் 31 இந்தியா vs குவாலிஃபையர் -துபாய்

செப்டம்பர் 1 இலங்கை vs பங்களாதேஷ் -துபாய்

செப்டம்பர் 2 பாகிஸ்தான் vs குவாலிஃபையர் -ஷார்ஜா.

செப்டம்பர் 3 B1 vs B2 -ஷார்ஜா

செப். 4 A1 vs A2 -துபாய்

செப். 6 A1 vs B1 -துபாய்

செப். 7 A2 vs B2 -துபாய்

செப். 8 A1 vs B2 -துபாய்

செப். 9 B1 vs A2 -துபாய்

செப். 11 இறுதிப்போட்டி -துபாய்

அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஒரு தகுதிச் சுற்றுடன் குழு ‘ஏ’ வில் உள்ளன‌. இலங்கை, ஆப்கானிஸ்தான் (Sri Lanka, Afghanistan) மற்றும் வங்காளதேசம் ஆகியவை குரூப் ‘பி’ யில் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் அணிகள் ‘ஏ’ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்துள்ளன.

ஆசியக் கோப்பை டி20யில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே ஒருமுறை மோதியதில், 2016ல் இந்தியா மீண்டும் போட்டியை வென்றது. ஒட்டுமொத்தமாக, ஆசியக் கோப்பைப் போட்டிகளில், பாகிஸ்தானை விட இந்தியா 8-6 முன்னிலை பெற்றுள்ளது. குரூப் ‘ஏ’ மற்றும் ‘பி’ குரூப்பிலிருந்து முதல் இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும், இந்தியா மீண்டும் பாகிஸ்தானை செப். 4 ஆம் தேதி எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. சூப்பர் 4 இல் முதல் இரண்டு அணிகள் செப். 11 ஆம் தேதி இறுதிப் போட்டியில் (Final on the Sep.11th) விளையாடும்.