Appreciation to the Tamil Nadu team: மகளிர் வாலிபால் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு அணிக்கு பாராட்டு

சென்னை: Appreciation to the Tamil Nadu team for winning the gold medal in the women’s volleyball tournament. கேலோ இந்தியா மகளிர் வாலிபால் லீக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு அணிக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசம், சிம்லா அருகாமையில் உள்ள ரோரு (ROHRU) என்ற இடத்தில் கடந்த 02/11/2022 முதல் 06/11/2022 வரை 19-வயதுக்கு உட்பட்ட பிரிவிற்கான மகளிர் வாலிபால் லீக் போட்டிகள் நடைபெற்றது.

இந்திய அளவில் தகுதி பெற்ற தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் , ஹரியானா, இமாச்சல் பிரதேசம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம்(SAI) ஆகிய 7-அணிகள் இந்தப் போட்டியில் விளையாடின. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி மற்றும் இந்திய விளையாட்டு ஆணைய மகளிர் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. தமிழ்நாடு அணிக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த அணியைச் சார்ந்த சுஜி, ஆனந்தி, மற்றும் நிதிஷா ஆகிய 3 வீராங்கனைகள் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) இரண்டாம் இடத்தையும், இமாச்சல பிரதேசம் மூன்றாம் இடத்தையும், கேரளா நான்காம் இடத்தையும் பெற்றன. தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு மகளிர் வாலிபால் (19-வயது பிரிவு) அணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சார்பிலும், தமிழ்நாடு மக்கள் சார்பிலும், அனைத்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சார்பிலும் பாராட்டுக்களை, தெரிவிப்பதோடு, தமிழ்நாடு வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பெற்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்று சாதனை படைக்க வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.