Asia Cup 2022 Trophy : 6 அணி, 1 கனவு, ஆசிய கோப்பை அறிமுகம்: சாம்பியன் யார் ?

இந்தியா ஏழு முறை சாம்பியனாகியுள்ளது. 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசியக் கோப்பையை வென்றுள்ள இந்தியா, இம்முறையும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது.

துபாய்: (Asia Cup 2022 Trophy) மதிப்புமிக்க ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஆசிய கிரிக்கெட் அணிகளிடையே உள்ள போட்டிக்கு சாட்சியாக இருக்கும் ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது.இறுதியில் வெற்றி பெரும் அணிக்கு வழங்கப்படும் சாம்பியன் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷேக் நஹ்யான் முபாரக் அலி ஆசிய கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் (India, Pakistan, Sri Lanka, Bangladesh, Afghanistan) ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி இந்தப் போட்டியில் பங்கேற்கும். சனிக்கிழமை நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் ஹை-வோல்டேஜ் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்த்து, நடப்பு சாம்பியனான இந்தியா தனது விளையாட்டைத் தொடங்க உள்ளது.

1984 முதல் மொத்தம் 14 முறை, ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு ஏழு முறை இந்தியா சாம்பியன் ஆனது (India became champion seven times). 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசியக் கோப்பையை வென்றுள்ள இந்தியா, இம்முறையும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது. இலங்கை 1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை ஆசிய கோப்பையை வென்றது, பாகிஸ்தான் 2000 மற்றும் 2012 இல் பட்டத்தை வென்றது.

ஆசிய கோப்பை டி20 (Asia Cup 2022) போட்டி அட்டவணை

குழு ஏ
இந்தியா Vs பாகிஸ்தான்: ஆகஸ்ட் 28, துபாய்
இந்தியா Vs தகுதிச்சுற்று அணி: ஆகஸ்ட் 31, துபாய்
பாகிஸ்தான் Vs தகுதிச் சுற்று அணி: 02 செப்டம்பர், ஷார்ஜா

குழு பி
இலங்கை Vs ஆப்கானிஸ்தான்: ஆகஸ்ட் 27, துபாய்
பங்களாதேஷ் Vs ஆப்கானிஸ்தான்: ஆகஸ்ட் 30, ஷார்ஜா
இலங்கை Vs பங்களாதேஷ்: செப்டம்பர் 01, துபாய்

சூப்பர்-4 க்கான‌ போட்டுகள்

B1 Vs B2: 03 செப்டம்பர், ஷார்ஜா
A1 Vs A2: 04 செப்டம்பர், துபாய்
A1 Vs B1: 06 செப்டம்பர், துபாய்
A2 Vs B2: 07 செப்டம்பர், துபாய்
A1 Vs B2: 08 செப்டம்பர், துபாய்
B1 Vs A2: 09 செப்டம்பர், துபாய்
இறுதி: செப்டம்பர் 11, துபாய்

போட்டிகளின் ஆரம்பம்: இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
நேரடி ஸ்ட்ரீமிங்: டிஸ்னி + ஹாட்ஸ்டார்

இப்போட்டியில் விளையாடும் 6 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் (India, Pakistan) மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி ‘ஏ’ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் குழு ‘பி’யிலும் இடம் பெற்றுள்ளன. குழுநிலையில் ஒவ்வொரு அணியும் ஒருமுறை நேருக்கு நேர் மோதும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும், அங்கு நான்கு அணிகளும் சூப்பர்-4 கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று விளையாடும். சூப்பர்-4ல் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இறுதிப் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.