Suryakumar 1000 runs : 550 பந்துகளில் 1026 ரன்கள் குவித்த சூர்யா, ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார்

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 28, டி20 இன்னிங்ஸ்களைக் கொண்ட சூர்யகுமார் யாதவ், மொத்தம் 550 பந்துகளில் 1026 ரன்கள் எடுத்துள்ளார்.

மெல்போர்ன்: Suryakumar 1000 runs : இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின் இறுதி லீக் ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்த போது சூர்யகுமார் யாதவ் 2022ல் 1 ஆயிரம் டி20 ரன்களை எட்டினார்.

டி20ஐ: 2022ல் அதிக டி20 ரன்கள் (டாப்-5)
1026: சூர்யகுமார் யாதவ் (இந்தியா); 28 இன்னிங்ஸ்
924: முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்); 23 இன்னிங்ஸ்
735: சிக்கந்தர் ராஜா (ஜிம்பாப்வே); 23 இன்னிங்ஸ்
731: விராட் கோலி (இந்தியா); 19 இன்னிங்ஸ்
713: பட்டுன் நிஸ்ஸங்க (இலங்கை); 24 இன்னிங்ஸ்

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 28, டி20 இன்னிங்ஸ்களில் ஆடிய சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), மொத்தம் 550 பந்துகளில் 1026 ரன்கள் எடுத்துள்ளார்.

டி20யில் சூர்யகுமார் யாதவ்: 2022

இன்னிங்ஸ்: 28, ரன்கள்: 1026, சராசரி: 44.60, ஸ்ட்ரைக் ரேட்: 186.54, அரைசதம்: 09, சதம்: 01

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை போட்டியில் அபாரமாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், தான் விளையாடிய 5 ஆட்டங்களில் 3 அரைசதங்களுடன் 225 ரன்கள் குவித்துள்ளார் (He has accumulated 225 runs with 3 fifties).

டி20 உலகக் கோப்பை 2022: சூர்யகுமார் யாதவ் அடித்த ரன்கள்
15 (10) Vs பாகிஸ்தான்
51* (25) Vs நெதர்லாந்து
68 (40) Vs தென்னாப்பிரிக்கா
30 (16) Vs வங்கதேசம்
61* (25) Vs ஜிம்பாப்வே

2021 மார்ச் 14, அன்று டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், ஒன்றரை ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆனார். ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் 863 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் (Pakistan wicket keeper batsman Mohammad Rizwan) 842 ரேட்டிங் புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்தின் டெவோன் கான்வே (792), பாகிஸ்தானின் பாபர் ஆசம் (780), தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் (767) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 638 ரேட்டிங் புள்ளிகளுடன் 10 வது இடத்தில் உள்ளார். இதுவரை இந்தியாவுக்காக 38 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 32 வயதான சூர்யகுமார் யாதவ், ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்களுடன் 1,270 ரன்கள் குவித்துள்ளார்.