Udhayanidhi reappointed as DMK Youth Secretary: இளைஞரணி செயலாளராக உதயநிதி மீண்டும் நியமனம்

சென்னை: Udhayanidhi reappointed as DMK Youth Secretary. திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள், மாநில மகளிர் அணி செயலாளர், மகளிர் தொண்டர் அணி செயலாளர், இணை, துணைச் செயலாளர்கள், உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியலின் படி, திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல், ந.ரகுபதி(எ) இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப. அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா (எ) பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளராக ஹெலன் டேவிட்சன், மகளிர் அணி இணைச் செயலாளராக குமரி விஜயகுமார், மகளிர் அணி துணைச் செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் தொண்டர் அணிச் செயலாளராக நாமக்கல் ப. ராணியும், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளராக தமிழரசி ரவிக்குமாரும், மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்களாக சத்யா பழனிகுமார், ஜெ.ரேகா பிரியதர்ஷினி, விஜிலா சத்யானந்த், மாலதி நாகராஜ் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Aadhaar Link with electricity connection: ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது நியாயமல்ல: அன்புமணி

திமுக மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்களாக சேலம் சுஜாதா, கே.ராணி ரவிச்சந்திரன், அமலு, டாக்டர் மாலதி நாராயணசாமி, மோ.தேன்மொழி, செ.உமாமகேஸ்வரி, ஜெ. ஜெசிபொன்ராணி ஆகியோரும், மகளிர் அணி – சமூக வலைதள பொறுப்பாளர்களாக டாக்டர் பி.எம்.யாழினி, ரத்னா லோகேஸ்வரன், அ.ரியா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மகளிர் அணி ஆலோசனைக்குழுவில் டாக்டர் காஞ்சனா கமலநாதன், சங்கரி நாராயணன், காரல் மார்க்ஸ், சிம்லா முத்துச்சோழன், சித்ரமுகி சத்தியவாணிமுத்து, வாசுகி ரமணன், காயத்ரி சீனிவாசன், மலர் மரகதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Udhayanidhi Stalin has been re-elected as the DMK Youth Secretary, the Central League has announced.