TTV Dinakaran condemns Minister Ponmudi’s speech: அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: TTV Dinakaran condemns Minister Ponmudi’s speech. அரசு பேருந்தில் “ஓசி-யில்” செல்வதாக அமைச்சர் பொன்முடி பேசிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு விழா ஒன்றில் பட்டியல் பிரிவு மக்கள் இன்று கோயில் தெருக்கள் வழியாக நடந்துசெல்வதே பெரியார் இட்டப்பிச்சை எனவும், பங்கேற்ற பெண்களை பார்த்து, ” ஓசி பஸ்சில் பயணம் செய்பவர்கள்”, எனவும் அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது.

பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா? மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?! என பதிவிட்டுள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுயைில், ”பெண் இனத்தையே அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி; தேர்தலில் இதற்கான தாக்கம் நிச்சயம் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், மக்களுக்கான சலுகைகளை நீங்கள் அவர்களின் வரிப்பணத்திலிருந்து தான் தருகிறீர்கள், பெருத்து வழியும் கோபாலபுரத்து கஜானாவிலிருந்தல்ல! கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வக்கில்லாத @arivalayam, நம்பி வாக்களித்த பாமர மக்களை துச்சமாக மதித்து ஏளனம் பேசுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.