Tamil Nadu BJP president k.Annamalai : தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மதுரை: Tamil Nadu Police’s hands are tied: Tamil Nadu BJP president k.Annamalai : தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை பாஜக அலுவலகத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: தமிழக அமைச்சர் பொன்முடி (Tamil Nadu Minister Ponmudi) சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு வரை இந்தி கட்டாயப் பாடமாகதான் இருந்தது. 1986 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இரண்டாவது கட்டாயக் கல்வி சட்டத்தில் இந்தி இருந்தது. திமுக ஆட்சியில் இந்தி கட்டாயப் பாடமாகதான் இருந்தது.

இந்தி திணிப்பு எங்கேயும் இருந்துவிடக்கூடாது என்பதில் பிரதமர் மோடியின் விருப்பமாக உள்ளது. பாஜகவின் நிலைப்பாடும் இதுதான். தமிழகத்தில் புதியக் கல்விக் கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் (They have started implementing a new education policy in Tamil Nadu). இல்லம் தேடி கல்வி திட்டம் கூட‌ புதிய கல்விக் கொள்கையில் ஒரு பகுதியாக உள்ளது. அதன் பெயரை மட்டும் மாற்றி வைத்துக் கொண்டுள்ளார்கள்.

மருத்துவம் மற்றும் பொறியியல் பாடப்பிரிவு தமிழில் கொண்டுவர பாஜகதான் முதலில் போராடியது (BJP was the first to fight to introduce medical and engineering courses in Tamil). தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் பாடப்பிரிவை முழுவதுமாக தமிழில் படிக்கக் கூடிய மாணவர்கள் 69 பேர்தான். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படித்து வரும் நிலையில், தமிழ் மொழியில் 69 பேர்தான் படித்து வருகின்றனர் என்ற நிலைமை உள்ளது.

தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டுப்பட்டுள்ளன. காவல்துறைக்கு சில அதிகாரங்களை நிச்சயம் வழங்க வேண்டும். காவல்துறை தயக்கம் காட்டினால் சில ஆண்டுகளில் தமிழகம் எங்கே செல்லும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இளைஞர்களும் சிறுவர்களும் போதைக் கலாசாரத்திற்கு அடிமையாகி (Youth and children are addicted to drug culture) உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பீர் பாட்டிலை எடுத்துச் செல்லும் நிலைமை உள்ளது. மதுவும், கஞ்சாவும் இளைஞர்களை சீரழித்து கொண்டுள்ளது. கோவை குண்டு வெடிப்பு இந்தியா முழுவதும் பேசப்படுவதற்கு பாஜக எடுத்த நடவடிக்கைதான் காரணம். கோவை குண்டு வெடிப்பு வழக்கு வெளிவந்ததற்கு தமிழக அரசு பாஜகவிற்கு நன்றி கடன் பட்டுள்ளது. இம்முறை நடைபெற உள்ள தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெறும் என்றார்.