Shortage of medicines for Cattle : தமிழகத்தில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது : எடப்பாடி பழனிசாமி

தமிழகம்‌ முழுவதும்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ பருவகால மாற்றத்திற்கு ஏற்ப கால்நடைகளுக்கும்‌, கோழிகளுக்கும்‌ மருத்துவ, விழிப்புணர்வு முகாம்கள்‌ நடத்தப்பட்டு தேவையான தடுப்பு மருந்துகள்‌ போடப்படும்‌.

சென்னை: Shortage of medicines for Cattle in tamilnadu: Edappadi Palaniswamy : தமிழகத்தில் கால்நடைகளுக்கும் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனக்குள்ள வலி, வேதனைகளை வாய் திறந்து சொல்ல முடியாத அப்பாவி கால்நடைகளின் (Innocent cattles) துயரங்களைக் கண்டறிந்து, அவைகளின் துயர் துடைக்கும் கடவுள்களாக கால்நடை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றுகிறார்கள். கடந்த 18 மாத கால திமுக ஆட்சியில், இந்தத் துறை பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது.

தமிழகம்‌ முழுவதும்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ பருவகால மாற்றத்திற்கு ஏற்ப கால்நடைகளுக்கும்‌, கோழிகளுக்கும்‌ மருத்துவ, விழிப்புணர்வு முகாம்கள்‌ நடத்தப்பட்டு தேவையான தடுப்பு மருந்துகள்‌ போடப்படும்‌. கால்நடைகளுக்கான மருந்துப்‌ பொருட்களும்‌ தமிழ்நாடு மருத்துவப்‌ பணிகள்‌ கழகம்‌ மூலம்‌ மொத்தமாக வாங்கப்பட்டு, மாநிலம்‌ முழுவதும்‌ அனுப்பப்படும்‌. ஆனால்‌, இதுவரை தடுப்பு மருந்துகள்‌ வாங்கவில்லை (Haven’t bought preventive medicine yet).

குறிப்பாக, மாடுகளுக்கு வேண்டிய மருந்துகளை இதுவரை வாங்காததினால்‌ இந்தாண்டு தமிழகம்‌ முழுவதும்‌ மாடுகளுக்கு கோமாரி நோய்த்‌ தடுப்பூசி போடப்படவில்லை (All over Tamil Nadu, cows are not vaccinated) என்றும்‌; இதனால்‌, மாநிலத்தின்‌ பல பகுதிகளில்‌ மாடுகளுக்கு நாக்கிலும்‌, வாயிலும்‌ அம்மை நோய்‌ தாக்கியுள்ளது என்று செய்திகள்‌ தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈரோட்டில்‌ மட்டும்‌ சுமார்‌ நூற்றுக்கணக்கான மாடுகள்‌, தடுப்பூசி போடாததால்‌ அம்மை நோயால்‌ பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள்‌ கால்நடை மருத்துவர்களிடம்‌ புகார்‌ தெரிவித்தனர்‌.

அப்போது, கால்நடை மருத்துவர்கள்‌ மாடுகளுக்குப்‌ போடவேண்டிய தடுப்பு மருந்து இதுவரை அரசால்‌ வழங்கப்படவில்லை என்றும்‌, ஆடுகளுக்குப்‌ போடவேண்டிய தடுப்பு மருந்து மட்டும்‌ உள்ளதாகவும்‌, எனவே, அந்த தடுப்பு மருந்தையே மாடுகளுக்குச்‌ செலுத்தி வருகின்றனர்‌. ஆறறிவு உள்ளவர்கள்‌ மட்டுமல்ல, ஐந்தறிவுள்ள கால்நடைகளின்‌ வயிற்றிலும்‌ அடிப்போம்‌ என்ற குறிக்கோளோடு இந்த அரசின்‌ முதல்வர் செயல்பட்டு வருகிறார்‌. தமிழ்நாடு மருத்துவப்‌ பணிகள்‌ கழகம்‌ (Tamil Nadu Medical Services Corporation), மனிதர்களுக்கும்‌ மருந்துகள்‌ கொள்முதல்‌ செய்வதில்லை, கால்நடைகளுக்கும்‌ கொள்முதல்‌ செய்வதில்லை. தமிழகத்தில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதான்‌ திராவிட மாடல்‌ ஆட்சி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.