Sasikala to meet EPS, OPS soon: எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் விரைவில் சசிகலா சந்திப்பு

சென்னை: Sasikala to meet Edappadi Palaniswami, Panneerselvam soon. விரைவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் சந்திக்க திட்டம் உள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அநவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டவுடன் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அதில் திருத்தம் இருந்தால், அவர்களே செய்து அனுப்புவார்கள். தொடர்ந்து இரண்டாவது முறையும் அனுப்ப வேண்டும். அதை பார்த்த பிறகு தான் புத்தகமாக அச்சிடப்படும். ஆனால் திமுக அரசு ஒரு முறை அனுப்பினார்களா அல்லது எத்தனை முறை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆகவே இதுகுறித்து கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை.

ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்ற அணுகுமுறை உள்ளது. அதைப்போல தமிழக அளுநரை, தமிழக அரசு நடத்த வேண்டும். ஒருவருக்கொருவர் ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல், ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும். ஆறு அடி கரும்பு ஒருவரால் வளர்க்க முடியாது. எதிர்க்கட்சி விமர்சனத்திற்கு பிறகே திமுக அரசு கரும்பு வழங்கியது.

மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொல்வதை மட்டுமே செய்வார்கள். மக்களை ஒருபோதும் அதிமுக ஏமாற்றியது இல்லை. ஆகவே வரும் காலங்களில் நன்றாக யோசித்து திமுக அரசு செயல்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்தி, அதை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரிடம் சமர்ப்பிப்போம். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு, எனக்கு என்ன பயம்? விரைவில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் சந்திக்கும் திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.