தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா (Sasikala Pushpa House Attack) வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இதுவரையில் தி.மு.க. கவுன்சிலர் உட்பட 13 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் 8வது தெருவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 22) காலை நாகர்கோவிலில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்காக சசிகலா புஷ்பா சென்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் தி.மு.க.வினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். வீடு மற்றும் கார் சேதமடைந்த வீடியோவை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. பிரச்சார பிரிவு தெற்கு மாவட்டச் செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் சசிகலா புஷ்பா வெளியில் சென்றதை அறிந்து, டுவிபுரம் 30வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் அதிர்ஷ்டமணி அவரது கணவர் ரவீந்திரன் மற்றும் 45வவது தி.மு.க. கவுன்சிலர் ராமகிருஷ்ணன், 30வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இசக்கி ராஜா உட்பட 9 பெண்கள் ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள்தான் சசிகலா புஷ்பாவின் வீட்டை சேதப்படுத்தியுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தி.மு.க. கட்சி ஆளுகிறது ஆனால் அவர்களின் கவுன்சிலர் பொது வெளியில் சென்று மாற்று கட்சியினரின் வீட்டை சேதப்படுத்துவதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முந்தைய செய்தியை பார்க்க:Elon Musk Says He Will Resign As Twitter Ceo: முட்டாள் மாதிரி ஒருவர் சி.இ.ஓ. கிடைத்தால் நான் ராஜினாமா செய்கிறேன்: எலான் மஸ்க்
முந்தைய செய்தியை பார்க்க:Highways Road Parking: பாலக்கோடு: எம்.ஜி.சாலையை இருபுறமும் ஒரு வழி சாலையாக மாற்றி வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றிய போலீசார்



