PM Modi: 5 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

5 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
5 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

PM Modi: இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று முன் தினம் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து பயணத்தின் 2-வது நாளான நேற்று பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். அங்கு அவர் டென்மார்க் பிரதமர் பிரதமர் மிட்டீ ஃபெடிக்செனை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், பயணத்தின் 3-வது நாளான இன்று பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். முன்னதாக, நார்டிக் எனப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய 5 நாடுகளில் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்த 5 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி கூட்டாக கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின்போது உக்ரைன் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தனது டென்மார்க் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்திக்க பாரிஸ் புறப்பட்டார்.

இதையும் படிங்க: தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள்- அமைச்சர் சேகர் பாபு தகவல்