BS Yeddyurappa in BJP’s parliamentary board : பாஜக நாடாளுமன்ற விவகாரக் குழுவில் பி.எஸ். எடியூரப்பாவிற்கு இடம் : சமாதானப்படுத்த கட்சி மேலிடத்தின் புதிய உத்தி

2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் தேர்தல் நடைபெறும் என்று பாஜக கூறி வந்தாலும், அவர் முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பிறகு, மாநில பாஜகவில் பி.எஸ். எடியூரப்பாவிற்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள‌து.

பெங்களூரு: BS Yeddyurappa in BJP’s parliamentary board, High Command’s new strategy : மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவிலும் தொடர்ந்து உள்கட்சி பூசல் பிரச்னை இருந்து வரும் நிலையில், பி.எஸ். எடியூரப்பாவின் ஆதரவாளர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. முதல்வர் பதவியில் இருந்து விலகிய பி.எஸ். எடியூரப்பா முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பி.எஸ். எடியூரப்பாவுக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுத்ததன் மூலம் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான‌ தேர்தல் ஆயத்தம் தொடங்கியுள்ளது.

2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் தேர்தல் நடைபெறும் (Elections will be held under the leadership of B.S. Yeddyurappa) என்று பாஜக கூறி வந்தாலும், அவர் முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பிறகு, மாநில பாஜகவில் எடியூரப்பாவுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாதது உள்ளிட்ட பல காரணங்களுக்காக எடியூரப்பாவுக்கு நெருக்கமான எம்எல்ஏக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். தற்போது, ​​அனைத்து அதிருப்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில்,பாஜக மேலிடம் எடியூரப்பாவுக்கு, நாடாளுமன்ற விவகாரக் குழுவில் (உயர்மட்டக் குழு) இடம் கொடுத்துள்ளது. இதனை பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல் உறுதி செய்து, மல்லேஸ்வராவில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய கட்டீல், மத்திய நாடாளுமன்ற விவகாரக் குழு புனர‌மைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து எடியூரப்பாவுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பி.எஸ். எடியூரப்பாவை வாழ்த்துகிறேன். இதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகத் பிரகாஷ் நட்டாவுக்கு வாழ்த்துகள். மத்திய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் நமக்கு சாதகமாக குரல் எழுப்பி, முடிவெடுப்பது வசதியாக உள்ளது என்றார். இந்த விவகாரம் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையும், எடியூரப்பாவிடம் பேசினார், இது உங்களுக்கு கிடைத்த பெரிய கவுரவம். இது கர்நாடகாவுக்கு பெரிய பலம். இந்த செய்தி மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று எடியூரப்பாவை, முதல்வர் பசவராஜ் பொம்மை (Chief Minister Basavaraj Bommai) வாழ்த்தி உள்ளார்.

கர்நாடகத்தில் பாஜகவின் மிகப் பெரிய வாக்கு வங்கி லிங்காயத்து சமுதாயத்தின் வாக்குகள் (Votes of the Lingayat community). எனவே, தேர்தலின் போது எடியூரப்பா தேர்தலில் போட்டியிடாமல் போனால், லிங்காயத் ஓட்டுகள் பிரியக் கூடும் என்ற அச்சத்தில், எடியூரப்பா மற்றும் அவரது ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெற பாஜக மேலிடம், இந்தப் பதவியை எடியூரப்பாவிற்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் முன்பு இருந்த நிதின் கட்கரி நீக்கப்பட்டுள்ளார். பி.எஸ். எடியூரப்பா சேர்க்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் பாஜக‌வில் தேர்தல் வித்தை அட்டகாசமாக தொடங்கி உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் என்ற அக்கட்சியின் கனவுக்கு இது போன்ற நடவடிக்கைகள் உதவுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாஜக மேலிடம் கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையில், கர்நாடக பாஜகவினர் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுள்ளனர்.