Aam Aadmi Party : அமைச்சர் அஸ்வத்நாராயணாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ஆம் ஆத்மி

ஒரு நிறுவனத்திற்கு 30 சதம் தேவையை வாங்கும் திறன் இருக்க வேண்டும். நிறுவனம் பகிர்ந்துள்ள ஆவணங்கள் போலியானது.

பெங்களூரு: Minister Ashwathnarayana should be sacked : தலித், பழங்குடி சமுதாய‌ மாணவர்களுக்கு ல்வி உபகரணங்கள் வழங்குவது தொடர்பான‌ முறைக்கேட்டில் ஈடுபட்டதற்காக அமைச்சர் நாராயணாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி க‌ட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிருத்வி ரெட்டி தெரிவித்தார்.

பெங்களூரில் வியாழக்கிழமை அவர்அளித்த பேட்டி: தலித், பழங்குடி சமுதாய‌ மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உபகரணங்கள் (Educational equipment) வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த‌ அமைச்சர் அஸ்வத் நாராயணாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

எங்கள் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் அஸ்வத் நாராயணா, ரூ. 5.27 கோடியை அரசுக்கு மிச்சப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். கொடுத்துள்ளார். போலி ஆவணங்கள் கொடுத்த‌ ஏலதாரரை காப்பாற்றியதை மறைக்க முயன்றுள்ளார். ஒரே ஒரு ஏலதாரர் (Contractor) மட்டுமே இருந்ததால், மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, முதல் சுற்றில் தோல்வியடைந்த நிறுவனத்திற்கே மீண்டும் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது என்பதுதான் உண்மை. இது கமிஷன் பெறுவதற்காக நடத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி. பணத்தை சேமிக்க அல்ல. ஒப்பந்தப்புள்ளி பெறுவதற்கான போலி ஆவணங்கள் குறித்து வாய் திறக்காத அமைச்சர், அரசுக்கு பணத்தை மிச்சப்படுத்தியதாக மட்டும் கூறுகிறார்.

ஒப்பந்த‌ நிபந்தனைகளின்படி, ஒரு நிறுவனத்திற்கு 30 சதம் தேவையை வாங்கும் திறன் இருக்க வேண்டும். நிறுவனம் பகிர்ந்துள்ள ஆவணங்கள் போலியானது. இது தொடர்பாக‌ ஜிஎஸ்டி போர்ட்டலில் (GST Portal) தெளிவாகத் தெரிகிறது. அமைச்சரும், துறை அதிகாரிகளும் இது தொடர்பாக‌ ஏன் கேள்வி எழுப்ப‌வில்லை என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

இன்னொரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால், இதே நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு லேப்டாப் மோசடியில் ஈடுபட்டது. 14,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மடிக்கணினியை 24,000 ரூபாய்க்கு வாங்கியதால், அரசு கருவூலத்திற்கு ( Government Treasury) பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இரு அவைகளிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. முறைகேட்டிற்கு உறுதுணை போன அமைச்சர் அஸ்வத் நாராயணாவை (Minister Ashwathnarayana) உடனடியாக‌ அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அல்லது நீதி விசாரணை நடத்த வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் அரசு முடிவெடுக்காவிட்டால், இந்த ஊழல் குறித்த கூடுதல் தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்து, மக்களுடன் இணைந்து போராடுவோம் என்றார்.