M.K.Stalin campaign: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

mk_stalin
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஈரோடு: DMK leader M. K. Stalin will campaign in support of Congress candidate EVKS Elangovan in Erode East by-election. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் அந்த தொகுதியில் உயிரிழந்த எம்எல்ஏ திருமகன் ஈவேராவின் தந்தை காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து பல்வேறு கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் சார்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்பி, அமைச்சர் உதயநிதி , சிற்றரசு, வெங்கடாச்சலம் உள்ளிட்ட 40 பேர் கொண்ட பட்டியலை தேர்தல் அலுவலரிடம் ஏற்கனவே கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். பிப்ரவரி 24 ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.