சென்னை : M.K.Stalin and I did not talk politics: West Bengal Chief Minister Mamata Banerjee : இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்த பேட்டி அளித்தனர். இருவரும் செய்தியாளர்களிடம் நாங்கள் அரசியல் குறித்து பேசவில்லை என்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் தற்காலிக ஆளுநர் (Acting Governor of West Bengal) இல. கணேசனின் சகோதரரின் 80 வது பிறந்த நாள் விழா, நாளை சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்தார். மாலை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார் . இந்த சந்திப்பின் போது ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாகுப், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது ஸ்டாலினுக்கு மம்தா நினைவு பரிசு வழங்கினார். மம்தாவுக்கு சாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை செய்தார்.
இதன் பிறகு நிருபர்களை சந்தித்த ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister M. K. Stalin) கூறியதாவது : தேர்தல் , அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. மேற்கு வங்கத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார் எனக்றினார். மம்தா கூறும்போது, ஸ்டாலின் எனது சகோதரரை போன்றவர். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள நான், ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி செல்ல முடியும் . இரண்டு கட்சி தலைவர்கள், அரசியலை தாண்டி வேறு விஷயங்கள் குறித்து பேசலாம். நாங்கள் அரசியல் குறித்து பேசவில்லை எனக் கூறினார். என்றாலும் இவர்கள் பேசிய அரசியல் குறித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தன.



