EVKS Elangovan met Kamal Haasan: கமல்ஹாசன் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: Congress candidate EVKS Ilangovan, who is contesting in the Erode East by-election, met Kamal Haasan today. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை இன்று சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிந்தார். இதனையடுத்து காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்தது. வரும் பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இம்மாதம் 31ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், கமல்ஹாசன் இந்த சந்திப்பில் எங்களுக்கு கை கொடுத்தது மட்டுமல்லாமல் காங்கிரசு கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கும் சேகரிப்பார் என்று நாங்கள் எதிர்பாக்கிறோம். கமல்ஹாசனின் இரத்தத்தில் தேசியமும் காங்கிரசு கலந்த ஒன்று. அவரது தந்தையார் காங்கிரசு கட்சியிலேயே தியாகியாக இருந்தவர். காமராஜரோடு அவரது தந்தையாருக்கு நெருங்கிய நட்பு உண்டு. காங்கிரசு கட்சியையும் கமல்ஹாசனையும் பிரிக்கவே முடியாது என்று அவர் தெரிவிததார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், காங்கிரசு கட்சியிலிருந்து ஆதரவு கேட்டு என்னை சந்தித்தனர். நிர்வாகிகளோடு பேசி ஆதரவு குறித்து விரைவில் அறிவிப்போம் என அவர் தெரிவித்தார்.