Edappadi Palaniswami Held A Meeting: ஈரோடு இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் (Edappadi Palaniswami Held A Meeting) உயிரிழந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அத்தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்க உள்ளது. தேர்தல் பணியாற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பணிக்குழுவை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், இந்த பணிகளை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 30) மாலை ஈரோட்டுக்கு வருகிறார். வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர் பூத் வாரியாக ஆய்வு செய்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் தேர்தல் பணிக்குழுவினர், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் உள்ளூர் பொறுப்பாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்தனர். அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.