TN Assembly: முன்னாள் அமைச்சரை கலாய்த்த துரைமுருகன்

முன்னாள் அமைச்சரை கலாய்த்த துரைமுருகன்
முன்னாள் அமைச்சரை கலாய்த்த துரைமுருகன்

TN Assembly: தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் பேசுகையில், நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் முன்னர் (துரைமுருகன்) கூறியது போல, ஆரோக்கியபுரம் முதல் ஈரோடு வரை 2001-ல் நான் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.150 கோடிக்கு கல்கள் போடப்பட்டன.

இப்போதைய சூழல் என்னவென்றால் இதற்கான கல், மண், ரா மெட்டீரியல் கிடைக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரி, மணல் கிடையாது. எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அந்த காலத்தில் “வாழ்க்கை” என்று ஒரு படம் அதில், “அந்த காலத்தில் நான் காலேஜ் படிக்கும் போது”… “அந்த காலத்தில் நான் காலேஜ் படிக்கும் போது”, என்று வரும் வசனம் மாதிரி, “அந்த காலத்துல நான் மந்திரியா இருக்கும் போது…”, “அந்த காலத்தில் நான் மந்திரியாக இருக்கும் போது” என உறுப்பினர் கூறுகிறார்.

அங்கு இருக்க கூடிய நிலை என்னவென்று உங்களுக்கே தெரியும். அந்த பிரச்சினை தொடர்ந்து அங்கு இருக்கிறது. கல்குவாரி வேண்டும் என்று ஒரு பிரிவும், வேண்டாம் என்று ஒரு பிரிவும் உள்ளனர். இந்த விஷயத்திற்கு சட்டமன்றம் முடிந்த பிறகு ஒரு முடிவுக்கு வருவோம் என்றார். அமைச்சர் துரைமுருகன் வாழ்க்கை படத்தின் வசனத்தை எடுத்துக்காட்டி பேசிய போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

முன்னதாக, கேள்வி நேரத்தில் பேசிய கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, தெக்குறிச்சி கடற்கரையில் 400 மீட்டர் நிலப்பரப்பில் கடல் நீர் உட்புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தடுக்க கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 1100 மீட்டர் தடுப்பு சுவர் அங்கு கட்டப்பட்டதாகவும் இருந்தபோதும் கடல் நீர் உட்புகுந்தால் தடுப்பு சுவர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவாதம் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Religious conversion: கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம்- தமிழக அரசு எச்சரிக்கை