Freeze Of Assets: தி.மு.க. எம்.பி. ராசாவின் ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

டெல்லி: தி.மு.க., எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஆ.ராசாவின் (Freeze Of Assets) ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று தருவதற்காக லஞ்சமாக வாங்கிய பணத்தை பினாமி பெயரில் கோவையில் சுமார் 45 ஏக்கர் நிலம் வாங்கிப்போடப்பட்டுள்ளது. இதன் தற்காலிக மதிப்பு சுமாராக 55 கோடி வரும் என கூறப்படுகிறது.

இந்த சொத்துக்களை தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அது மட்டுமின்றி தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. தி.மு.க. கட்சி தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த எம்.பி.யின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:OPS Munnetra Kazhagam: ஓ.பி.எஸ் முன்னேற்ற கழகம் என்ற கட்சி ஆரம்பிக்கலாம்: ஜெயக்குமார்

முந்தைய செய்தியை பார்க்க:Former Minister Sellur Raju: எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்டவர்கள் கிடைத்தால் மிதிப்போம்: செல்லூர் ராஜூ