K.S. Eshwarappa : சிவமொக்கா வன்முறைக்கு காங்கிரஸ் காரணம்: முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா குற்றச்சாட்டு

பெங்களூரு : Congress responsible for Shivamogga violence : சிவமொக்கா வன்முறைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா குற்றச்சாட்டினார்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சிவமொக்காவில் நேற்று சுதந்திர தினத்தையொட்டி சாவர்கர் பிளக்ஸ் (Savarkar Flex) வைக்கப்பட்டிருந்தது. இதனை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநகர உறுப்பினரின் கணவர் கிழித்து போட்டுள்ளார். அவரை கண்டிப்பதை விட்டுவிட்டு, அக்கட்சியினர் பாஜகவின் மீது குற்றம் சாட்டுகின்றனர். வன்முறையின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர். இதன் காரணமாகத்தான் சிவமொக்கா வன்முறையை காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை.

சிவமொக்காவில் எந்த காரணத்தைக் கொண்டும் சட்டம் ஒழுங்கு தோல்வி அடையவில்லை (Law and order has not failed). வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. வன்முறைக்கு அனைத்து முஸ்லீம் மக்கள் மீதும் நான் குற்றம் சாட்ட மாட்டேன். இதற்காக இந்துகளை சளைத்தவர்கள் என்று கருத வேண்டாம். இந்துகள் பொங்கி எழுந்தால், முஸ்லீம் குண்டர்கள் தாங்க மாட்டார்கள். இந்துகள் அமைதி பிரியர்கள். அவர்கள் பொங்கி எழுந்தால் என்ன ஆகும் என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். முஸ்லீம் குண்டர்களுக்கு பின்னணியில் காங்கிரஸ் உள்ளது.

இந்துகள் விநாயகர் திருவிழாவை கொண்டாடுவதற்கு யாரேனும் குறுக்கே வந்தால் அது நல்லதல்ல. எங்கள் பண்டிகையை கொண்டாடுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லை என்றால் எங்களின் வழியில் குறுக்கே வர வேண்டாம். சிவமொக்கா வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாதான் (DK Sivakumar and Leader of Opposition Siddaramaiah) காரணம். அவர்கள் இருவரும் சாதியவாதிகள். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட சில முஸ்லீம் தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். என்றாலும் ஒரு சில குண்டர்களுக்கு அவர்கள் புத்திமதி கூற வேண்டும். இல்லை என்றால் இந்து சமுதாயமும், மாநில அரசும் அவர்கள் புத்திமதியை கூற வேண்டி வரும்.

சிவமொக்கா வன்முறை தொடர்பான அனைத்து விவரங்களையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன் (I have brought it to the attention of the Chief Minister). வன்முறைக்கு எஸ்டிபிஐயின் ஆதரவும் உள்ளது. அவ்வமைப்பின் மனநிலை இன்னும் மாறவில்லை. இந்துகளை கொல்வதுதான் அவர்களின் நிலைபாடு. எனவே இது தொடர்பாக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். அரசின் விளம்பரத்தில் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதற்கு காரணம் அவர் நாட்டை பிளவு படுத்தியவர் என்பதுதான் என்றார்.