Congress Mla died of Heart Attack: காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் மாரடைப்பால் மரணம்

ஈரோடு: முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் (Congress Mla died of Heart Attack) மகனும், கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான திருமகன் 46, மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மகன் திருமகன் ஈவெரா ஆகும்.

இவரும் தனது தந்தையை போன்று அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிர் பிரிந்தது. மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்தாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எம்.எல்.ஏ. மறைவை தொடர்ந்து பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.