Siddaramaiah :சிவமொக்கா வன்முறைக்கு காங்கிரஸ் காரணமா? : சித்தராமையா விளக்கம்

பெங்களூரு : BJP is unnecessarily blaming the Congress for the Shivamogga violence : சிவமொக்கா வன்முறைக்கு காங்கிரஸ் காரணம் என்று பாஜகவினர் தேவையில்லாமல் குற்றம் சாட்டி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா விளக்கம் அளித்தார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பொய் சொல்வது பாஜகவினரின் பிறப்பு குணம் (Lying is BJP’s birthright). அதனை யாராலும் மாற்ற முடியாது. அவர்கள் எதர்கெடுத்தாலும் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி வருகின்றனர். காமாலை நோய் கண்டவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியும். அதை போலத்தான் பாஜகவினருக்கும் ஆகி உள்ளது. அவர்கள் குழந்தையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி வருகின்றனர். முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் சாவர்கர் படத்தை ஏன் வைக்க வேண்டும். அப்படி அவரது படத்தை வைத்த பிறகு, திப்பு சுல்தான் படத்தை வைக்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவர்கள் வேண்டுமென்றே வன்முறையைத் தூண்ட செயல்பட்டு வருகின்றனர்.

எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ அமைப்புகளை தேவையில்லாமல் குற்றம் சாட்டி வருகின்றனர். அவர்கள் மீது தவறு இருந்தால், அரசு நடவடிக்கை மேற்கொள்ளட்டும். ஆனால் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அரசு மௌனம் சாதித்து வருகிறது. தென் கன்னட மாவட்ட‌த்தில் கொலையான இந்து அமைப்பைச் சேர்ந்த பிரவீன் நெட்டாரு (Praveen Nettaru) வீட்டிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஆனால் அதே மாவட்டத்தில் முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்த மற்றொருவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் முதல்வர் அவரது வீட்டிற்கும் செல்லவில்லை. அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் கூறவில்லை. அவரது குடும்பத்தினருக்கு நிவாரணமும் வழங்கவில்லை. இது அவரது பாராபட்சத்தை காண்பிக்கிறது.

முதல்வர் பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைப்பாவை ஆகி உள்ளார் (He has become a puppet of the RSS organization). அவரால் வேறு என்ன செய்ய முடியும். அவர்களது போலி தேசபக்தி. பாஜகவினருக்கு வரலாறு தெரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி நேருவை புகழ்கிறார். ஆனால் மாநிலத்தில் முதல்வர் நேருவின் புகைப்படத்தை விளம்பரத்தில் போட மறுக்கிறார். சாவர்கரின் செய்கைகளை மறைத்து வைத்துக் கொண்டு, செயல்படும் முதல்வரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். சாவர்கர் எந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதனை அவர்கள் விளக்க வேண்டும். வரலாற்றை திருத்த வேண்டாம். வரலாற்றை திருத்துவது பாஜகவினருக்கு கைவந்த கலை என்றார்.