All party meeting is a drama: K. Annamalai : அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு நாடகம், அதில் பங்கேற்க விரும்பவில்லை: கே.அண்ணாமலை

சென்னை: All party meeting is a drama, Not wanting to participate in it : K. Annamalai : அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு நாடகம், அதில் நடிகர்களாக பங்கேற்க விரும்பவில்லை என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதம் இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பினையடுத்து (Supreme Court judgment) மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனை பாஜக, அதிமுக புறக்கணித்தது.

இது குறித்து கே.அண்ணாமலை வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான‌ இட ஒதுக்கீடு மூலமாக ரெட்டியார், நாயுடு, பிள்ளை, முதலியார், பிராமணர்கள், மலங்கரா கிறிஸ்துவர்கள், தாவுத் மற்றும் மீர் இஸ்லாமியர்கள் (Reddyar, Naidu, Pillai, Mudaliar, Brahmins, Malangara Christians, Daud and Mir Muslims) உள்ளிட்ட79 சமுதாயத்தினர் பயன் பெறுவார்கள்.

அனைத்து தரப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஒரே கட்சி பாஜகதான் (BJP is the only party that cares about people’s welfare). இன்று நடைப்பெற்றுள்ள அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு நாடகம். இதில் நடிகர்களாக பங்கேற்க விரும்பவில்லை. ஆகவே நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான கூட்டத்தை தமிழக பாஜக புறக்கணிக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.