Jumma Masjid : ஜும்மா மசூதிக்குள் ஒற்றைப் பெண்கள் நுழைய தடை

டெல்லி: The ban stated that women should not be allowed inside the mosque alone and only if they are accompanied by a man. மசூதிக்குள் தனியாக பெண்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அவர்களுடன் ஆண் இருந்தால் மட்டுமே அனுமதி என்றும் தடையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

(Women are prohibited from entering the Jumma Masjid alone) ஜும்மா மசூதி வளாகத்திற்குள் நுழைய பெண்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் உடன் செல்ல வேண்டும். மசூதி வளாகத்திற்குள் தனியாக பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டெல்லி ஜமா மஸ்ஜித் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. ஆனால் தற்போது நிர்வாக குழுவின் இந்த முடிவுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன், ஜும்மா மசூதி நுழைவு வாயிலில் தடை விதிக்கப்பட்டது. மசூதிக்குள் தனியாக பெண்களை அனுமதிக்கக் கூடாது என்றும், ஆண்களுடன் சென்றால் மட்டுமே, மசூதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் (Only if accompanied by men, will be allowed inside the mosque) என்று, தடையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த தடைக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தக் குறிப்புக்கு பதிலளித்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் (Delhi Commission for Women Chairperson Swati Maliwal), இது தொடர்பாக ஜும்மா மசூதி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் போவதாகவும், அத்தகைய தடையை பிறப்பிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறினார்.

நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “பெண்கள் சமூக வலைதளங்களில் வீடியோ எடுப்பதைத் தடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது (There is a ban to prevent women from taking videos on social media). இதனால் தொழுகை நடத்த வருபவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. “குடும்பத்தினர் மற்றும் திருமணமான தம்பதிகள் மசூதிக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை” என்றார்.